Your cart is empty.


நீடாமங்கலம்
இன்றைக்கு எண்பதாண்டுகளுக்கு முன்பு, நிலவுடைமை அமைப்பு வலுவாகக் கோலோச்சியிருந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நீடாமங்கலத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது ஏற்பாடு செய்திருந்த சமபந்தி போஜனத்தில் … மேலும்
இன்றைக்கு எண்பதாண்டுகளுக்கு முன்பு, நிலவுடைமை அமைப்பு வலுவாகக் கோலோச்சியிருந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நீடாமங்கலத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது ஏற்பாடு செய்திருந்த சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டதற்காகத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இருபதுபேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எந்தக் கட்சியும் கிளர்ந்தெழாத நிலையில் பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் அவர்கள் சார்பில் முனைந்து போராடியது. வன்கொடுமைக்குக் காரணமான நிலக்கிழார் பார்ப்பனரல்லாத உயர்சாதியினராக இருந்தபொழுதும் பெரியார் உறுதியுடன் நீதிமன்றம் வரை சென்று போராடினார். இந்த இழிவன்கொடுமையை அதனுடைய வரலாற்றுச் சூழலில் பொருத்தி ஏராளமான ஆவணங்கள், சமகாலச் செய்திகள், கள ஆய்வுத் தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தி சேரன்மாதேவி, முதுகுளத்தூர், கீழ்வெண்மணி முதலான குறியீட்டு முக்கியத்துவமுடைய நிகழ்வாக நீடாமங்கலத்தை முன்னிறுத்தியிருக்கிறார் ஆ. திருநீலகண்டன். திராவிட இயக்கத்துக்கும் தலித்துகளுக்குமான உறவு நிலை பற்றிய ஆய்வுக்கு இந்நூல் முக்கியப் பங்களிப்பாகும். ஆ.இரா. வேங்கடாசலபதி
ISBN : 9789386820006
SIZE : 13.9 X 0.7 X 21.5 cm
WEIGHT : 175.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும் (1815-1945)
"பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெ மேலும்
தொல்காப்பியமும் அல் - கிதாப்பும்
த. சுந்தரராஜ் உலகச் செம்மொழிகளின் முதல் இலக்கணங்களைத் தமிழின் தொல்காப்பியத்தோடு ஓப்பீடு செய்வதில் மேலும்
சாதிக்குப் பாதி நாளா? ராஜாஜியின் கல்வித்திட்டம்
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான மேலும்
ந. பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனித நேயமும்
பிச்சமூர்த்திக்கு வயது ஏற ஏற ஞானம் கூடிற்று. கலையார்வம் மிகுந்தது. மரபு சார்ந்த மயக்கங்கள் தெறித் மேலும்
சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை
‘உரைநடையின் தன்மைகளைத் தக்கவைத்துக்கொண்டு’ நவீன கவிதையைக் கட்டியெழுப்பிய முன்னோடிக் கவிஞர் சுந் மேலும்
மணல்மேல் கட்டிய பாலம்
இந்திய, தமிழகப் பண்பாட்டு அரசியலில் விவாதிக்கப்பட்டு வரும் இராமர் பாலம், சரஸ்வதி ஆறு, துவாரகை, கு மேலும்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
வீரபாண்டியக் கட்டபொம்மனைச் சிலர் பழி தூற்றி, உண்மையை மறைத்துத் தங்களுக்கு ஏற்பத் திரித்து எழுதின மேலும்
சிறகு முளைத்த பெண்
சமூகம், மதம், அரசியல், நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எ மேலும்
திராவிடச் சான்று
1856இல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதி வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கும் முன மேலும்
எழுதித் தீராப் பக்கங்கள்
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று மேலும்
நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்
அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நட மேலும்