Your cart is empty.



திருடன் மணியன்பிள்ளை
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: குளச்சல் மு. யூசுப் |
வகைமைகள்: கசங்கிய, கறைபட்ட நூல்கள் விற்பனைக்கு |
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் தானாகவே வாதாடுவார். இவரது குறுக்கு விசாரணைகள், போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும். ஒருபுறம் மனிதத்தன்மை யற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும். திருவனந்தபுரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்ட இவர் ஒரு கட்டத்தில் திருடிய பொருளுடன் குடும்பத்தோடு மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடை தொடங்குகிறார். பிறகு யூசுஃப் பாட்சா எனும் பெயரில் அங்கே புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டு ஏழைப் பங்காளன் எனப் பெயர் பெறுகிறார். பிறகு மைசூரில் இவரது வளர்ச்சி கர்நாடக மாநில முதலமைச்சருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவுக்கு முன்னேறுகிறது. மக்களவைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்தவரும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவருமாக இருப்பதால் ‘மாண்புமிகு’கூட இவரது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது. இந்நிலையில், இவர் மைசூரிலிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு வந்த கேரளக் காவல் துறை இவரைக் கைது செய்கிறது. ஒரே இரவுக்குள் சம்பாதித்த அத்தனைச் செல்வங்களையும் இழந்துவிட்டு வெறுங்கையுடன் கேரளத்திற்குக் கொண்டுவரப்படுகிறார் மணியன்பிள்ளை.
ISBN : d978-93-82033-00-4
SIZE : 15.1 X 2.9 X 23.0 cm
WEIGHT : 742.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அகவிழி திறந்து
பத்திரிகை, பதிப்பகம், லௌகீக வாழ்க்கையில் ஏற்பட்ட தன் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகை மேலும்
வலை உணங்கு குருமணல்
யுத்தத்தால் சின்னாபின்னப்பட்டுப் போன ஒரு கடற்கரைச் சிற்றூரையும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியலைய மேலும்
ஒளிவிலகல்
தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவரான எம். யுவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்திய மரபிலிர மேலும்
செம்பருத்தி
விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர் பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் ந மேலும்
கொழுத்தாடு பிடிப்பேன்
வாய்மொழி மரபின் தனித் தன்மைகளை, எழுத்து மரபின் வசீகரங்களுடன் பிணைத்துப் பயன்படுத்தும் முத்துலிங் மேலும்
கரமாஸவ் சகோதரர்கள்
-உலகின் மகத்தான படைப்பாகிய ‘கரமாஸவ் சகோதரர்கள்’ நாவல் அதன் மூலமாகிய ரஷ்ய மொழியிலிருந்து நேரடியா மேலும்
ஊர்சுற்றி
யுவன் சந்திரசேகரின் ஏழாவது நாவல் ‘ஊர்சுற்றி’. அவரது நாவல்களின் வாசகனாக இந்த எல்லா நாவல்களிலும் ஓர மேலும்
திருடன் மணியன்பிள்ளை
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறத மேலும்
திருடன் மணியன்பிள்ளை
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறத மேலும்
ராஜன் மகள்
காதலில் ஆண் ஒரு பயணி. பெண்ணைப் பற்றிக்கொண்டு பிராயங்களின் விளிம்புகளில், பிறவிகளின் புதிர்களில், மேலும்