Your cart is empty.

தேவிபாரதி
பிறப்பு: 1957
தேவிபாரதி (பி. 1957) எண்பதுகளில் சிறுகதைகள் மூலம் அறிமுகமாகித் தொடர்ந்து பல்வேறு தீவிர இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிதுகாலம் செயல்பட்டவர். 1993இல் வெளிவந்த இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘பலி’ பரவலான கவனத்தைப் பெற்றது. 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அக்காதெமியின் பரிசுபெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2014இல் காலச்சுவடு வெளியிட்ட ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என். கல்யாண ராமன் மொழிபெயர்ப்பில் Harper Collins Publications வெளியீடாக ‘Farewell Mahatma’ என்னும் தலைப்பில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள புதுவெங்கரை யாம்பாளையம் என்னும் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்ட தேவிபாரதி தமிழக அரசுக் கல்வித்துறையில் பணியாற்றி 2006இல் விருப்ப ஓய்வுபெற்றார். காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் ‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் ஓராண்டு பணியாற்றினார். தற்போது நூலகராகப் பணியாற்றும் மனைவி ரத்தினாம்பாளுடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வசித்துவருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கறுப்பு வெள்ளைக் கடவுள்
கடந்த சில ஆண்டுகளில் தேவிபாரதி எழுதிய நான்கு கதைகளைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு. தொகுப்பின் கதைக மேலும்
பிறகொரு இரவு
தேவிபாரதியின் இந்த நான்கு கதைகளையும் வாசிக்கையில் எனக்கு வசப்பட்ட கருத்து இலக்கியப் புனைவில் அவரு மேலும்
வீடென்ப . . .
தேவிபாரதியின் சிறுகதைகள் கதையாடல் என்ற அளவில் தெளிவாகக் கட்டமைக்கப்பட் டிருப்பவை. பெரிதும் ஆண்-பெ மேலும்
நட்ராஜ் மகராஜ்
தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு ‘நட்ராஜ் மகராஜ்’ என்று எண்ணுகிறேன். கதையாடலில் நிகழ் மேலும்
நிழலின் தனிமை
ஓர் அபத்தமான நாள் முப்பது வருட நீட்சியுடன் முடிவடையாமல் தொடர்வது எப்படி? அது முடிவடையும் கணத்தில மேலும்