Your cart is empty.
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் நாவல் |
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.
தி. ஜானகிராமன்
தி. ஜானகிராமன் (1921 - 1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். சிட்டியுடன் இணைந்து இவர் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோகமுள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோகமுள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பதிப்பாசிரியர்: சுகுமாரன் (பி.1957) கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.
ISBN : 9789380240886
SIZE : 13.7 X 0.7 X 21.0 cm
WEIGHT : 225.0 grams
புனிதா சிதம்பரம் (விஜயா பதிப்பகம் யூடியூப் தளம்)
7 Jun 2025
கமலக்கண்ணன் கோபிநாதன்
27 Mar 2025
தி. ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” நாவல் பற்றிய பார்வை
சில கதாபாத்திரங்கள், எளிய நடை, இலகுவான வாசிப்பு, பக்க அளவில் சிறிய நாவல். ஆயினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் தீவிரமான உணர்ச்சிகளையும் ஆதாரமான கேள்விகளையும் எழுப்பத் தவறவில்லை என்பதே இதன் சிறப்பு. இந்நூல் தமிழின் நற்படைப்புகளுள் ஒன்று என்பதில் ஐயமேதும் இல்லை.
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/15uQrwLxRH/?mibextid=wwXIfr
bustardss
30 Oct 2024
அம்மா வந்தாள் by தி ஜானகிராமன்
அம்மா என்ற ஒரு உறவுக்கு, கதாபாத்திரத்திற்கு வைக்கப்படும் அல்லது சார்ந்து இருக்கும் ஒரு புனிதத்தன்மை. அம்மா என்றால் ஒரு இப்படி தான் இருக்க வேண்டும், இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற கட்டமைப்பை உடைக்கிறது அம்மா வந்தாள். இலக்கியத்தில் மீறல்கள், அழகாக இருந்தாலும், நிஜவாழ்க்கையில் அவை ஏற்றுக்கொள்ள படுவதில்லை.
-அப்பு வேத பாடசாலையில் தங்கி படிக்கிறான், அங்கே அவன் மீது காதல் கொள்கிறாள் இந்து. இந்து யார், அவளுக்கு அங்கு என்ன வேலை, அப்புவின் மனச்சிக்கள்கள் எல்லாம் சேர்ந்தது தான் இந்த அம்மா வந்தாள். தி ஜாவின் படைப்புகள் தீவிர இலக்கியத்திர்க்குள் சேர்காலமா வேண்டாமா என்ற விவாதம் பல ஆண்டுகாலமாக ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது, இது தான் நான் படிக்கும் அவரது முதல் நாவல், கண்டிப்பாக சிறந்ததொரு படைப்பு. நல்ல experience
விக்னேஷ் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
22 Apr 2026
தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ கிளாசிக் நாவல்
”தவறுக்கும் சரிக்கும் இடையிலான மெல்லிய கோடு எது? தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' - உறவுகளின் சிக்கல்களையும், ஒரு தாயின் மனப்போராட்டத்தையும் அதன் அசல் தன்மையுடன் பேசும் ஆகச்சிறந்த படைப்பு. மரபுகளைக் கடந்து மனித மனங்களைப் புரிந்துகொள்ள ஒரு பயணம்.”
நன்றி: விக்னேஷ் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுமையான பதிவுக்கு:
https://www.instagram.com/p/DW_lTF-kgx3/?hl=en
Janakiraman’s cantrovertial novel. Widely Considered a modern Classic. Beautiful edition.<\p>
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கச்சேரி (இ-புத்தகம்)
-தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். நவீன புனைகதைக்கு அவர் அளித்திருப்பவை மேலும்
செம்பருத்தி (இ-புத்தகம்)
-விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர் பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் மேலும்














