Your cart is empty.
காட்டில் நடந்த கதை
‘பதேர் பாஞ்சாலி’ நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு இது. மண்ணின் மனதை வாசித்தறிந்த கலைஞர் விபூதிபூஷண். அவரது படைப்புலகில் இயற்கை தனது மானுடச் சாயலை வெளிப்படுத்துகிறது. தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் புழுக்களும் பூச்சிகளும் மனித இயல்பு கொள்கின்றன. அதே சமயம் மனிதர்கள் இயற்கையின் கொடையாக உருவம் பெறுகின்றனர். அவர்களது மனமும் செயலும் மிகையின்றி அப்பட்டமாக முன்வைக்கப்படுகின்றன. அவர்களது நன்மையும் வன்மமும் பகையும் பயமும் குதூகலமும் பச்சை வாடை மறையாமல் சித்தரிக்கப்படுகின்றன. மனிதனை இயற்கையுடன் இயையுபடுத்தும் சூழலியல் முயற்சிகள் இன்று வியந்து பேசப்படுகின்றன. ஆனால் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்த நோக்கைத் தனது கலையில் பிரதிபலித்தவர் விபூதிபூஷண் பந்தோபாத்யாய. இந்தத் தொகுப்பு அந்தக் கலை நோக்கின் சான்றுகளில் ஒன்று.