Your cart is empty.
புதுமைப்பித்தன் களஞ்சியம்
-
-1930களின் பிற்பகுதி, ஸ்பெயினில் கடுமை யான உள்நாட்டுப் போர் மூள்கிறது. இந்தக் கொந்தளிப்பான சூழலிலிருந்து தப்ப லட்சக்கணக்கான மக்கள் மலைகள் வழியாகப் பயணம் மேற்கொள்கிறார்கள். கர்ப்பிணியும் இளம் விதவையுமான ரோஸரும் அவர்களில் ஒருத்தி. இறந்த தனது காதலனின் சகோதரனும் இராணுவ மருத்துவருமான விக்டர் தல்மாவின் வாழ்க்கையுடன் அவள் வாழ்க்கை பின்னிப் பிணைந்திருக்கிறது.
கவிஞர் பாப்லோ நெரூடா ஏற்பாடுசெய்த கப்பலில் இரண்டாயிரம் அகதிகளுடன் ரோஸரும் விக்டரும் சிலிக்குப் புறப்படுகிறார்கள். ஐரோப்பாவின் பிற பகுதிகள் உலகப் போரில் சிக்கியிருக்கும் போது இவர்கள் போரிலிருந்து தப்பி வேறொரு நாட்டில் அடைக்கலமாகிறார்கள். புதிய நாடு, புதிய அரசியல் சமூகச் சூழல் என அவர்களது வாழ்க்கை அடியோடு மாறுகிறது.
சுதந்திரத்திற்கும் அடக்குமுறைக்கும் இடையிலான போருக்கிடையில் துளிர்க்கும் உறவுகளையும் உறவின் மாறாட்டங்களையும் அவற்றின் விளைவுகளையும் இந்த நாவல் விவரிக்கிறது. போர்கள் அரசியல் அரங்கில் மட்டுமின்றிப் பண்பாட்டுத் தளத்திலும் தனிநபர்களின் வாழ்விலும் பார்வையிலும் ஏற்படுத்தும் ஆழமான மாற்றங்களையும் உணர்த்துகிறது.
-அபாயங்கள் நிறைந்த சூழலில், நீண்ட பல வருடங்களாக, போரின் அழிவுகளையும் மீறி அங்கு பிடிவாதமாக வாழ்ந்திருக்கும் குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்து அலங்காரங்களோ உரத்த குரலோ ஆவேச உணர்வோ அற்றது.
- வெங்கட் சாமிநாதன்
எழுத்துக்கும் வாழ்க்கைக்குமுள்ள இடைவெளிகளை அகற்றிக்கொண்டு சமகால ஈழத்து நிகழ்ச்சிகளின் ஊடாக, வாசகரைப் பயணிக்கவைப்பதன் மூலம் புதிய அநுபவத்தை ஏற்படுத்துதல் குந்தவையின் கலை வெற்றியாகும்.
- எஸ்.பொ
-பெருமாள்முருகனின் நான்காம் சிறுகதைத் தொகுப்பு இது. இதழ்களில் வெளியானபோது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்ற கதைகள் இதில் உள்ளன. கிராம வாழ்வையே பெரிதும் தம் கதைப்பொருளாகக் கையாளும் இவர் மனித மனவியல்புகளையும் சிடுக்குகளையும் சம்பவங்கள் மூலம் மிக எளிதாகக் காட்சிப்படுத்துகிறார். எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிடாமல் வாசகருக்கான திறப்புகளைத் தன்னகத்தே கொண்டதே படைப்பு என்னும் உணர்வுடன் செறிவாக எழுதப்பட்டுள்ளன இக்கதைகள். அங்கங்கே கவிதைத் தெறிப்பு தோன்றும் எளிய மொழி இவரது கதைகளுக்கு வசீகரம் தருகிறது.
-தமிழ்க் கலாச்சாரத்தில் இசை ஏற்படுத்தும் தாக்கம், தமிழிசை வரலாற்றின் மைல் கற்கள், தென்னிந்திய இசை வடிவங்களின் சமுதாய மற்றும் கலாச்சாரக் குறியீடுகள், இசை வல்லுனர்களின் சிறப்பம்சங்கள்; அவர்களின் சோதனைகள்; சாதனைகள்; அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவக் குறிப்புகள், நவீன தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் போன்றவை இக்கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன.
பார்வையில் படாத பழங்கவிதைகள், நூற்றுக்கணக்கான புதுக்கவிதைகள் போன்றவை பாடலாகியுள்ள விதம், சங்கீதத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவு என இசையின் பன்முகத் தளங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரு நாவலின் அத்யாயங்களைப் படிப்பதுபோல அவ்வளவு எளிமையாக சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டுள்ளன. ரவிசுப்பிரமணியத்தின் இந்நூல் இசை சார்ந்த எழுத்துக்கு ஒரு புது வரவு.
திவாகர் சுப்பிரமணியம்
-பிச்சமூர்த்தி வலியுறுத்தற வேதாந்தம் அல்லது அத்வைதம் அல்லது ஆன்மீகம் இந்திய மரபில் தொன்றுதொட்டு வர்ற ஒண்ணுன்னுதான் தோணுது. அந்த மரபில் காலங்காலமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களைத்தான், கருத்துக்களைத்தான் அவர் திரும்பச் சொல்கிறார். ஏற்கெனவே உள்ள பதில்களைத்தான் தன்னுடைய கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்கிறார்.
சுகுமாரன்
நவீன இலக்கிய வடிவங்களிலயே, தமிழ்ல அதிகமாக் கையாளப்பட்டிருப்பது கவிதைதான்! ஆரம்ப வருடங்கள்லெ புதுக் கவிதைய ‘அகண்ட காவிரி’ ஆகிவிட்டதாக நம்பிய
ந. பிச்சமூர்த்தி, இன்றைக்கு இருக்குற எண்ணிக்கையையும், நிலையையும் பார்த்தா அதிர்ந்தே போவார். ஆனாலும், இதன் மூலச் சுனைகளில் முதன்மையானவர் என்கிற பெருமையை ஒருபோதும் இழக்கமாட்டார்.
யுவன் சந்திரசேகர்
-எல்லைகளற்ற தமிழ்ப் பரப்பில் இலக்கியச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகவும் சீர்மையுடனும் பங்களித்து வருகிற பதினான்கு எழுத்தாளர்களுடனான நேர்காணல்களின் சிறப்பான தொகை நூல் இது.
நூலில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள் நமது அறக்கட்டுப்பாடு, தன்வரலாற்றுக்கும் சமூக வரலாற்றுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார்கள்.
மிகச் சிறப்பு வாய்ந்த நூல் இது.
-இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் புகுந்த நாளிலிருந்து வெளியேறிய நாள்வரை, ஈழத்தின் மண்ணுக்கும் மக்களுக்கும் நிகழ்ந்ததைச் சித்திரிக்கும் படைப்பு இது. இந்தியாவை நட்பு நாடாகவே கருதிவந்த ஈழத் தமிழர்களின் எண்ணம் இதன் பிறகு மாறியதாகவே பலரும் கருதுகிறார்கள். இந்திய அமைதிப்படை ஈழத்தில் தங்கியிருந்த காலத்தின் நிகழ்வுகளைச் சொல்லும் இந்த நாவல் அதனால் ஈழத் தமிழர் மனங்களிலும் வாழ்விலும் ஏற்பட்டுவிட்ட நிரந்தரமான மாற்றங்களை அடையாளம் காண முயல்கிறது. வரலாற்றுப் பதிவை காலாபூர்வமான கண்ணோட்டத்துடன் முன்வைக்கும் இரவி அருணாச்சலம் ஈழத் தமிழரின் வாழ்வையும் வரலாற்றையும் புனைவின்வழி ஆவணப்படுத்திவருகிறார். அந்த வகையில் இது அவரது ஐந்தாவது நாவல்.
-நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளுமையான கு. அழகிரிசாமி, அப்போது எழுத்தாளராக மலராத நண்பர் கி. ராஜநாராயணனுக்கு எழுதிய 99 கடிதங்களின் தொகுப்பு ‘என் உயிர்த்தோழனே’. அழகிரிசாமி புதுமைப்பித்தனுக்கு எழுதிய கடிதமும் அதில் உண்டு.
இசை, இலக்கியம், பத்திரிகை, சென்னை வாழ்க்கை ஆகிய அனுபவங்களால் நிறைந்தவை இக்கடிதங்கள். எளிமையும் சுவாரஸ்யமும் கடிதங்களில் இழையோடுகின்றன.
அட்டையில் உள்ள படம் அழகிரிசாமி, ராஜநாராயணனுக்கு அனுப்பிய சிறப்பு அஞ்சல் அட்டை ஒன்றில் உள்ள படம்.
அதில் “நம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய கொள்கை இதுவே” எனும் வரியை அழகிரிசாமி எழுதியுள்ளார்.
-தமிழ் இலக்கிய வகைமையில் மடைமாற்றத்தை ஏற்படுத்தியவை பக்தி இலக்கியங்கள். குறிப்பாக ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்த பாசுரங்கள். இவை மரபுவழிப்பட்ட தமிழ் இலக்கிய வகைமையின் மூலக்கூறுகளோடு ஊடாடிப் புத்திலக்கிய வகைகளை உருவாக்கின.
இந்நூல், யாரும் எளிதில் அணுகத் தயங்குகின்ற வைணவ இலக்கிய வகைகளின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு ஆகியவற்றை விளக்கிப் பேசுகிறது. ஆழ்வார் பாசுரங்களில் இதுவரை கவனப்படுத்தப்படாத பகுதிகளில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது. திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள முழுமைபெற்ற இலக்கிய வகைகளோடு புதிய இலக்கிய வகைமையின் தோற்றத்திற்கான வேர்களையும் அடையாளங்காட்டுகிறது. வியாக்யானிகளின் செறிவுமிகுந்த உரைப்பகுதிகள் தகுந்த இடங்களில் பொருத்திக் காட்டப்பட்டுள்ளமை இதன் கூடுதல் சிறப்பு.
தமிழ் வைணவ இலக்கியத்தில் ஆழத்தோய்ந்த தமிழறிஞர் ம.பெ.சீ.யின் அரிய கொடை இந்நூல்.
-ஈழத்தமிழ் எழுத்தாளரான சாந்தன், தான் பார்த்த திரைப்படங்கள், பயணித்த தேசங்கள், படித்த நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள், தேடியலைந்த பழைய புத்தகக் கடைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த நூலில் பகிர்ந்துகொள்கிறார்.
அனுபவங்களைச் சொல்லும்போது சாந்தனுக்குள் இருக்கும் தேர்ந்த கதைசொல்லியின் இயல்பு வெளிப்படுவதால் இந்தக் கட்டுரைகள் புனைகதைகளைப் படிப்பதற்கு ஒப்பான அனுபவத்தைத் தருகின்றன. எதைப் பற்றி எழுதினாலும் சுருக்கமாகவும் வசீகரமாகவும் எழுதும் திறன் சாந்தனுக்குக் கைகூடியிருக்கிறது. பரபரப்பற்ற நிதானமான மொழியைக் கொண்டிருக்கும் இக்கட்டுரைகள் வாசிப்பவர்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
-குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா?
காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் உச்சத்தையும் மனம் இழக்கும் அமைதியையும் இரு முனைகளாகக் கொண்டு நாவல் விரிவடைகிறது. துறவறத்தின் மாயநிலைகளை இந்த நாவல் தன் பாத்திரங்கனூடே நிகழ்த்திக்காட்டுகிறது.
குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள விரும்பும் இளைஞனின் அகப்போராட்டத்தை, அன்றாட இன்னல்களை, சிக்கல்களை, நிலையின்மையால் உருவாகும் தடுமாற்றங்களை, போதாமைகளை மறைத்து வாழும் சிறுமைகளை, அவமானங்களை நாவல் விவரிக்கிறது.