Your cart is empty.
தமிழர் உணவு
உயிரினங்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று உணவு. எனினும் உயிர்வாழ்வதற்காக மட்டுமே மனிதர்கள் சாப்பிடுவதில்லை. நாகரிகத்தின் வளர்ச்சிப் போக்கில் உணவுப் பழக்கவழக்கங்கள் உணவின் ஆதார நோக்கத்தைத் தாண்டிப் பன்முக நோக்கங்கள் கொண்டு பரிணமித்துவருகின்றன. ரசனை, சுவை, உடல்நலம், தட்பவெப்பநிலை, நம்பிக்கைகள், பொருளாதாரம், நடைமுறைச் சாத்தியங்கள், சமூகப் படிநிலைகள், பொழுதுபோக்கு எனப் பல்வேறு காரணங்கள் உணவைப் பண்பாட்டு அடையாளமாக மாற்றிவிட்டிருக்கின்றன.
நீண்ட நெடிய நாகரிக வாழ்வின் மரபு கொண்ட தமிழர்களின் வாழ்க்கை, பண்பாடு, சமூகப் படிநிலைகள், நம்பிக்கைகள் எனப் பல்வேறு கூறுகளை உணர்த்தும் வல்லமை உணவுக்கு உண்டு. மிக விரிவான ஆய்வுகளைக் கோரும் தமிழர் உணவு குறித்த சுருக்கமான சித்திரங்களை இந்நூலில் காணலாம். தமிழர் உணவு குறித்துக் ‘காலச்சுவடு' இதழில் (2005 செப்டம்பர்) வெளியான சிறப்புப் பகுதியின் விரிவான வடிவமே இந்நூல்.
மானுடவியல் அறிஞர் பேராசிரியர் பக்தவத்சல பாரதியின் சீரிய உழைப்பின் விளைவு இந்த நூல். தமிழின் முக்கியமான ஆளுமைகள் பலரின் பங்களிப்புகளைக் கொண்டுள்ள இந்நூல் தமிழர் உணவு பற்றிச் சுவையும் பொருட்செறிவும் கொண்ட எண்ணற்ற தகவல்களைச் சொல்கிறது.