Your cart is empty.
மோகத்திரை
உமா வரதராஜனுக்கு சினிமா ‘மனக்கடலின் உள் நதி நீரோட்டம்’. வாழ்க்கையின் இனிய தருணங்களிலும் துயர நிமிடங்களிலும் பிணைந்து நின்ற ஒன்று. சினிமா தந்த அனுபவங்களே அதைப் பற்றிய ரசனையையும் அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களே அதைப் பற்றிய நுட்பங்களையும் அதன் மூலம் வசப்படுத்திக்கொண்ட பட்டறிவே விமர்சனங்களையும் அவருக்கு வழங்கியிருக்கிறது. சொந்த அனுபவங்களின் வலுவில் மட்டுமே உமா வரதராஜன் தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரது திரையெழுத்தின் தனித்துவம் இது.









