Your cart is empty.
காலச்சுவடு வெளியீடுகள் பற்றி
காலச்சுவடு
1995இல் தொடங்கப்பட்ட காலச்சுவடு பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி இலக்கியப் பதிப்பகம். 1995இலிருந்து, தமிழ் நவீன இலக்கியத்தின் தற்காலப் போக்குகள் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களிலும் இதழிலும் உருப்பெற்றும் மெருகேற்றப்பட்டும் வருகின்றன. உலக இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்த தமிழ் வாசகருக்காக காலச்சுவடு தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறது. இதுவரை ஆயிரம் தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் முன்னணி தமிழ்ப் பதிப்பகங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
காலச்சுவடு பதிப்பகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் அம்பை, ஜெயகாந்தன், ஜி. நாகராஜன், தோப்பில் முகம்மது மீரான், அசோகமித்திரன், பெருமாள்முருகன், சி.சு. செல்லப்பா, சல்மா, ஆ.இரா. வேங்கடாசலபதி, சுகுமாரன், பா. வெங்கடேசன், சேரன், க. கைலாசபதி, எம்.ஏ. நுஃமான், ஆ. சிவசுப்பிரமணியன், அ.கா. பெருமாள், பழ. அதியமான், தொ. பரமசிவம், சுகிர்தராணி, ஸ்டாலின் ராஜாங்கம், தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, மௌனி, சுந்தர ராமசாமி போன்றோர்.
காலச்சுவடு பிரசுரித்துவரும் நவீன படைப்பாளுமைகளுக்கான செம்பதிப்புகள் நவீன இலக்கியத்தைத் தொகுக்க முன்மாதிரிப் பதிப்புகளாக அமைந்துள்ளன. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுவரும் கல்விப்புல ஆய்வுநூல்களையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவை சமகாலப் பொருத்தமும் வாசிப்புத்தன்மையும் கொண்டவையாக இருப்பதோடு புலமைமிகாத நடையில் அமைந்து பரவலாக வாசகர்களை சென்றடைந்துள்ளன.
காலச்சுவடு தமிழில் மொழிபெயர்த்திருக்கும் புகழ்பெற்ற உலக இலக்கியவாதிகள் ஒரான் பாமுக், அருந்ததி ராய், ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி, ஆல்பர்ட் காம்யு, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், பிரான்சுவாஸ் சகன், ராபர்ட்டோ கலாஸ்ஸோ, ஜான் பான்வில், யோஸ்டைன் கார்டெர், லெ கிளேஸியோ, சில்வியா பிளாத், அய்ஃபர் டுன்ஷ், அலெசான்ட்ரோ பாரிக்கோ, எர்னெஸ்ட் ஹெமிங்வே, லோரன்ஸ் வில்லலோங்கா, அகமத் ஹம்தி தன்பினார், பெர் பெதர்சன், டயான் ப்ரோகோவன், ஜேஸே ஸரமாகோ, தாக் ஸூல்ஸ்தாத், டேவிட் கிராஸ்மன், லியா மில்ஸ், ஆந்திரேயி மக்கீன், லாரா ஃபெர்கஸ், மார்ட்டீன் ஓ ‘கைன்’, ஹுவான் மனுவேல் மார்க்கோஸ், ஹால்டார் லேக்ஸ்நஸ், ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா வு மிங்-யி, ஸான்ட்ரா கால்னியடே, கார்டன் வைஸ், டேனியல் லிம், ரிஸார்த் காபுஸின்ஸ்கி, டெனிஸ் கொலென், ஹினெர் சலீம், உய்பெர் அதாத், தெல்ஃபின் மினூய், லூயிஸ் பால் பூன், இபெக் ஷாலிஷ்லர் ஆகியோர்.
இதுவரை காலச்சுவடு 142 மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. இதில் தமிழுக்கு மொழிபெயர்த்த இந்திய உலக மொழிகளின் பட்டியல் இது. உலக மொழிகள்: பிரெஞ்சு, வெல்ஷ், ஸ்பானிஷ் (அர்ஜென்டீனா , கொலம்பியா) பராகுவே, ஃபின்னிஷ், துருக்கி, ப்ளெமிஷ், கட்டலன், அரபி, சீனம், ஹீப்ரு, ஆங்கிலம் (இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமரிக்கா) ஐரிஷ், சிங்களம், நார்வேஜியன், ஜெர்மன், ஐஸ்லாண்டிக், ரஷ்யன். இந்திய மொழிகள்: வங்காளம், கன்னடம், தெலுங்கு, கொங்கிணி, மணிப்பூரி, ஹிந்தி, மலையாளம்.
சாமாந்திரமாக காலச்சுவடில் முன்னெடுக்கப்பட்ட கீழ்க்காணும் இந்திய/உலக மொழிகளுக்கு காலச்சுவடு பிரசுரித்துள்ள தமிழ் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன/மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
உலக மொழிகள்: ஆங்கிலம் (இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா), ஜெர்மன், கலீஸீயன், பிரெஞ்சு, கொரியன், செக், போலிஷ், இத்தாலியன், சீனம், துருக்கியம், ஸ்லோவேனியன், அல்பேனியன்.
2020 வெள்ளிவிழா ஆண்டை எட்டியிருக்கும் காலச்சுவடு பதிப்பகம் தரமான தமிழ் நூல்களை வெளியிடும் முன்னோடித் தமிழ்ப் பதிப்பகமாக நிலைவரப்பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு Publishing Next எனும் பதிப்பாளர் அமைப்பு வழங்கும் சிறந்த இந்தியப் பதிப்பகத்திற்கான விருதும் சிறந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளுக்காக வழங்கப்படும் ரொமைன் ரோலண்ட் விருதும் வழங்கப்பட்டது. சிறந்த புத்தகத் தயாரிப்புக்கான விருதை 2019ஆம் ஆண்டு இந்திய பதிப்பாளர் கூட்டமைப்பு (FIP) வழங்கியது. தரம் என்பதைத் தற்காலச் சமூகப் பொருத்தத்துடனும் நவீன வாசகனின் கைக்கெட்டும் விலையுடனும் இணைத்து ‘காலச்சுவடு’ முடிவு செய்கிறது. இந்தியாவின் தென்கோடியிலிருந்து செயல்பட்டுவரும் இப்பதிப்பகம் காலச்சுவடு என்ற அரசியல் பண்பாட்டு மாத இதழையும் பிரசுரித்து வருகிறது.
காலச்சுவடு இதழ்
காலச்சுவடு இதழ் 1987 ஜனவரி மாதம் சுந்தர ராமசாமியால் (1931-2005) தொடங்கப்பட்டது. உரிய காலத்தில் வெளிவந்த எட்டு இதழ்களுக்குப் பிறகு 1992இல் காலச்சுவடு ஆண்டுமலரை வெளியிட்ட பின்னர் இவ்விதழ் நிறுத்தி வைக்கப்பட்டது. 1994இல் அவருடைய மகன் கண்ணன் சுந்தரத்தால் வேறு வடிவத்துடனும் உள்ளடக்கத்துடனும் மீண்டும் காலாண்டு இதழாக தொடங்கப்பட்டது. 2000ஆவது ஆண்டு காலச்சுவடு இதழ் இருமாத இதழாக வெளிவரத் தொடங்கியது. 2004இல் மாத இதழாகியது. படைப்பிலக்கியம் மொழி, சமூக வரலாறு, அரசியல், விவசாயம், சுற்றுச்சூழல், திரை, பண்பாடு போன்ற பல பொருள்களில் காலச்சுவடு இதழ் படைப்புகளைப் பிரசுரித்து வருகிறது. அக்டோபர் 2020 இல் காலச்சுவடு 250 இதழ் வெளிவரும். தமிழ் இதழியல் வரலாற்றில் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக உரிய காலத்தில் வெளிவரும் தீவிர இதழ் வேறு எதுவும் இல்லை.
புலம்பெயர்ந்தோர் இலக்கியம், பெண்ணியம், சமூக நீதி, கருத்துச் சுதந்திரம், இந்திய-தமிழ் தேசியம், மதவாதம், மதச்சார்பின்மை, கல்வி போன்ற பலப் பொருள்களில் காலச்சுவடு தனிக் கவனம் செலுத்திவருகிறது.
இந்தப் புத்தாயிரத்தின் முதல் பத்து ஆண்டுகளில் காலச்சுவடில் பிரசுரிக்கப்பட்ட சிறப்புப்பகுதிகள்:
தூக்குத்தண்டனை, மதச்சார்பின்மை, குஜராத் கலவரம் 2002, இலங்கை இனக்கலவரங்கள், ஆறுகளை இணைக்கும் திட்டம், மத அடிப்படைவாதம், தமிழர் உணவு, பெரியார் 125 ஆகியன இந்தச் சிறப்புப் பகுதிகள் பல்வேறுவிதமான விவாதங்களைக் கிளப்பியது.
அடுத்த பத்தாண்டுகளில் சிறப்புக் கவனம்பெற்ற விஷயங்கள்:
தமிழகத்தில் பள்ளிக் கல்வி, கிரிக்கெட் - பொய்களின் ஆடுகளம், ஈழ இனப்படுகொலை, தமிழ்த் திரை, ஜெயகாந்தன் அசோகமித்திரன் சுந்தர ராமசாமி இலக்கியப் பங்களிப்புகள், கருத்துச் சுதந்திரம், திராவிட அரசியலின் நாகரிகம், அயோத்திதாசர் நூற்றாண்டு, பெண் மெய் உண்மைகள்/புனைவுகள், சென்னை மழைப்பேரிடர், ஜெயலலிதா-மாயைக்கு அப்பால், பாரதியை அறிதல், ஜல்லிக்கட்டின் அரசியல் - எழுச்சியின் வாடிவாசல், கருணாநிதி-பேசமறந்த சூரியன், மொழியும் கல்வியும், ஸ்டெர்லைட் போராட்டம், தமிழ் சினிமா - டிஜிட்டல் யுகத்தில், சிற்பி தனபால் நூற்றாண்டுக் கட்டுரைகள், தமிழ் - சமஸ்கிருத உறவு, அம்பேத்கர்.
கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டம்
காலச்சுவடு தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் பொருள்களில் முக்கியமானது கருத்துச் சுதந்திரம். இப்பொருள் சார்ந்து பல ஆழமான கட்டுரைகளை காலச்சுவடு பிரசுரித்துவருகிறது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படும்போதெல்லாம் காலச்சுவடு தலையங்கம்வழியும் கட்டுரைகள்வழியும் எதிர்வினையாற்றி வருகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பெண் கவிஞர்கள் தமது உடல்சார்ந்தும் பாலியல் சார்ந்தும் எழுதப்பட்ட கவிதைகள் கடுமையாகத் தாக்கப்பட்டபோது காலச்சுவடு அவர்களுக்கு ஆதரவாக நின்று கருத்துப்பிரச்சாரம் மேற்கொண்டது.
சட்டப்போராட்டங்கள்
திமுக அரசு (2006-2011) காலச்சுவடு இதழ்களைத் தமிழக அரசு நூலகங்களில் தடைசெய்தபோது காலச்சுவடு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் சென்னைக் கிளையை அணுகியது. 2008ஆம் ஆண்டுக்குப்பிறகு காலச்சுவடில் திமுக ஆட்சிபற்றி வந்த விமர்சனப்பூர்வமான கட்டுரைகளே இத்தடைக்குக் காரணம். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை முதலில் அரச உத்தரவுக்கு இடைக்காலத் தடையை வழங்கியது. பின்னர் 2011ஆம் ஆண்டு காலச்சுவடு இதழுக்கான நூலக ஆணையைத் தொடர முடிவுசெய்து அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
2014ஆம் ஆண்டு பெருமாள்முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு எதிராகப் பெரும்பான்மை சாதிய மதவாதச் சக்திகள் அணிதிரண்டபோது காலச்சுவடு பெருமாள்முருகன் சார்பாக நின்று கருத்துச் சுதந்திரத்திற்கான உலகளாவியப் பிரச்சரத்தை முன்னெடுத்தது. இப்பிரச்சினையை நோக்கி இந்திய உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் காலச்சுவடு துரிதமாகச் செயல்பட்டது. காலச்சுவடு இதழிலும் அதற்கப்பாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் காலச்சுவடு அன்பர்கள் பெருமாள்முருகனுக்கு ஆதரவாகப் பல கட்டுரைகளை எழுதினார்கள். இப்பிரச்சினை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றபோது பியுசிஎல் (PUCL) பொதுச்செயலாளர் டாக்டர் வி. சுரேஷுடன் இணைந்து காலச்சுவடு இவ்வழக்கை முன்னெடுத்தது. 2016ஆம் ஆண்டு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் வழங்கிய தீர்ப்பானது கருத்துச் சுதந்திரத்திற்கான வரலாற்று முக்கியத்துவம் கொண்ட முன்மாதிரியான தீர்ப்பாக அமைந்தது.
பல்வேறு பிரச்சினைகள் சார்ந்து கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் ஆரோக்கியமான நுட்பமான ஆதாரப்பூர்வமான அரசியல் விவகாரங்களை காலச்சுவடு துணிச்சலாக நாளதுவரை முன்வைத்து வருகிறது.
Kalachuvadu means ‘Time’s Footprints’ in Tamil
Since 1995, Kalachuvadu Publications (KP) has blazed a trail by publishing the finest in contemporary Tamil writing, in addition to bringing the best of world literature to the doorstep of the discerning Tamil reader through translated titles.
With a catalogue of over 1,000 titles, Kalachuvadu is a vibrant presence in the landscape of Tamil and Indian publishing. Our writers include the award-winning Ambai, Jayakanthan, G Nagarajan, Thoppil Mohammed Meeran, Ashokamitran, Perumal Murugan, Si Su Chellappa, Salma A.R. Venkatachalapathy, Sukumaran, B. Venkatesan, Cheran, K. Kailasapathy, M.A. Nuhman, A. Sivasubramanian, A.K. Perumal, Pazha. Athiyamaan, Tho. Paramasivam, Sukirtharani, Stalin Rajankam, Thi. Janakiraman, M.V. Venkatram, Karichan kunju, Mouni and Sundara Ramaswamy. KP’s chronological variorum editions of acclaimed Tamil modernists has set the benchmark for other publishers. Its bestselling series of academic titles have also been well-regarded for their relevance and readability.
In keeping with its commitment to promote exemplary literature from across the world, Kalachuvadu has published Tamil translations of the acclaimed works of authors such as Orhan Pamuk, Arundhati Roy, Fyodor Dostoevsky, Albert Camus, Gabriel García Márquez, Francoise Sagan, Roberto Calasso, John Banville, Jostein Gaarder, J M G Le Clézio, Sylvia Plath, Ayfer Tunc, Alessandro Barrico, Ernest Hemingway, Llorenc Villalonga, Ahmed Hamdi Tanpinar, Per Petterson, Diane Broeckhoven, Jose Saramago, Dag Solstad, David Grossman, Lia Mills, Andrei Makine, Lara Fergus, Mairtin O Cadhain, Juan Manuel Marcos, Halldor Laxness, F.E. Sillanpaa, Wu Ming-Yi, Sandra Kalniete, Gordon Weiss, Danielle Lim, Ryszard Kapuscinski, Denis Collin, Hiner Saleem, Hubert Haddad, Delphine MINOUI, Louis Paul Boon, Ipek Calislar.
Now in its 25th year, Kalachuvadu Publications continues to be the frontrunner of high-quality Tamil publishing. It was awarded the Best Publisher Award by Publishing Next (2018) as well as the Romain Rolland award for best translation from French to an Indian language (2018). It also won the Federation of India Publishers’ Best Book Production Award (2019). For Kalachuvadu, the touchstone of quality will always be defined by the social relevance of a book, rather than its commercial success. Based in Nagercoil (south India), KP also publishes a magazine by the name same - a monthly review of politics and culture.
The Flagship Magazine
Kalachuvadu was launched by Sundara Ramaswamy (1931-2005) in 1987. It was initially launched as a quarterly and ran for eight issues. After a special edition published in 1992, Sundara Ramaswamy discontinued the magazine. His son, Kannan Sundaram, re-launched the magazine in a different format in 1994 but retained its quarterly cycle. Kalachuvadu became a bi-monthly in 2000 and a monthly magazine since 2004. It focuses on a wide range of spheres such as creative writing, translation, philosophy, film, history, politics, agriculture, environment and other social issues.
Today, the magazine is the flagship of Kalachuvadu Publications; as of October 2020, over 250 issues have been published.
The magazine has consistently generated quality content in key areas such as politics, environment, women’s issues, social justice, caste, Indian and Tamil nationalism, secularism, literature, diasporic writing and freedom of expression.
With its proven history of upholding freedom of expression and creating healthy, nuanced debates on various issues, KP aspires to create vibrant, well-researched and in-depth political content without fearing those in power.
The special sections of Kalachuvadu magazine are well received for their sharp and in-depth analyses that reflect varied perspectives.
In the first decade of the millennium, some major themes of the magazine were: capital punishment, secularism, the 2002 Gujarat riots, the Sri Lankan ethnic war, interlinking rivers, religious fundamentalism, Tamil cuisine, social reformer Periyar (E V Ramasamy), globalization and Tamil publishing history. These special sections have generated robust discussions on various platforms.
In the last decade, we have focused on issues such as school education in Tamil Nadu, the Sri Lankan genocide, freedom of expression, Dravidian political culture, Dalit Buddhist ideologue Ayothee Das, the Chennai floods, the politics of Jallikattu, language and education, the anti-Sterlite struggle, gender and the body, the Sanskrit-Tamil relationship, Ambedkar, Gandhism, Tamil cinema, women’s writing and Tamil in the digital age, among others.
Fight for Freedom of Expression
Freedom of expression is an area to which Kalachuvadu has assigned the utmost importance. It has published vibrant articles forcefully defending freedom of expression whenever it has come under attack.
Legal Battles
When the DMK government (2006-11) decided to withdraw its order on the purchase of Kalachuvadu magazine for public libraries, the publication challenged the directive in the Madurai division of the Madras High court. The government move came in 2008 after Kalachuvadu took a critical view of some of its policies. The court granted interim relief and finally, the government informed the court in 2011 that the status quo ante would be reinstated.
More recently (2014-16), Kalachuvadu took up the issue of the violent protests against Madhorubhagan, a novel by acclaimed Tamil writer Perumal Murugan. The protests instigated by forces that stood in support of caste and religious majoritarianism. Kalachuvadu published a number of articles defending the author and held various public meetings to uphold the writer’s rights. Kalachuvadu successfully ran a campaign to ensure the attention of national and international media on the issue. It also fought for the writer’s right in court.