Your cart is empty.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (விலையடக்கப் பதிப்பு)
-சமத்துவமும் இணக்கமான சக வாழ்வும் அன்பும் நிறைந்த உலகை அனைவருமே விரும்புகிறோம். அத்தகைய கனவின் கலாபூர்வமான வெளிப்பாடு என்று ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலைச் சொல்லலாம்.
வட்டாரம், சாதி, மதம், மொழி, இனம் என எந்த அடையாளமும் அற்ற உலகக் குடிமகன் என்று சொல்லத்தக்க ஹென்றி என்னும் கதாபாத்திரத்தின் வழியே ஜெயகாந்தன் இந்தக் கனவை முன்வைக்கிறார். ஆசாபாசங்களும் அன்றாட நெருக்கடிகளும் கொண்ட மனிதர்களும் இந்த நாவலில் கணிசமாக இருக்கிறார்கள் என்றாலும் இவற்றையெல்லாம் கடந்து வாழ்வின் வேறொரு தளத்திற்குச் செல்வது எப்படி என்பதை இந்த நாவல் கோடிகாட்டுகிறது. லட்சியக் கனவை முன்வைக்கும் நாவல் யதார்த்தத்தில் அழுத்தமாகக் காலூன்றி நின்றபடி அதைச் செய்கிறது.
52 ஆண்டுகளுக்குப் பிறகும் புத்துணர்வைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் இந்த நாவல் நவீன தமிழின் சிறந்த படைப்புகளில் ஒன்று.











