Your cart is empty.
நினைவுத் தீ
-கடந்த சில பதிற்றாண்டுகளாகப் பெண் எழுத்து பற்றிய விழிப்புணர்வும் விவாதங்களும் தமிழ்ச் சூழலில் காத்திரமாக நடைபெற்றுவருகின்றன. முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. புதுமைப்பித்தன் என்ற பேராளுமையின் வாழ்வையும் படைப்பையும் புரிந்துகொள்ளக் கமலா விருத்தாசலம் இன்றியமையாதவர் என்பது ஒருபுறமிருக்க, சிறுகதை எழுதிய முதல் தலைமுறை பெண் எழுத்தாளர்களில் முதல்வர் என்ற முறையில் அவருடைய கதைகள் தனிக் கவனத்திற்குரியவை என்பதை இத்தொகுப்பு காட்டுகிறது. குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை மிக நுட்பமாகப் பல கதைகள் படம் பிடித்துக்காட்டுகின்றன. குழந்தைகளின் உணர்வுகளும் மனத்தைக் கவரும்வகையில் இடம் பெறுகின்றன. மலையாள வாழ்க்கையின் சாயல்கள் கதைகளுக்குத் தனித்தன்மையைத் தருகின்றன.