Your cart is empty.
தலித்துகளும் தண்ணீரும்
-
நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான சிறுகதைகளை உருவாக்கியவர், சுரேஷ்குமார இந்திரஜித். மனத்த மேலும்
திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை மேலும்
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள் மேலும்
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர் மேலும்
சுந்தர ராமசாமியை ஈர்த்த மிகச் சில அரசியல் தலைவர்களிடையே மறுபரிசீலனைகளில் சிறிதளவும் தன் ஆளுமையின் மேலும்
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரம மேலும்
நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான சிறுகதைகளை உருவாக்கியவர், சுரேஷ்குமார இந்திரஜித். மனத்தின் ரகசியங்களும், வாழ்வின் ரகசியங்களும், தம்மைப் புனைகதைகளாக இவரது மொழியில் எழுதிச் செல்கின்றன. வித்தியாசமான சூழலில், வித்தியாசமான மனிதர்கள், சிருஷ்டிகரமாக இக் கதைகளில் உருவாகியுள்ளார்கள் என்பதோடு, இக்கதைகளில் எழுத்தாளனின் பார்வையும் ஊடுருவியுள்ளது. இவரது ஒவ்வொரு தொகுப்பிலுள்ள கதைகளும், கதையமைப்பில் மாறுதல்களுடன் பயணம் செய்துகொண்டிருப்பதால், இத் தொகுப்பிலுள்ள கதைகளும், முந்தைய தொகுப்புகளிலுள்ள கதைகளிலிருந்து மாறுபட்டு, மேலும் மாறுதல்களைச் சந்திக்கச் சென்றுகொண்டிருக்கின்றன.
சுரேஷ்குமார இந்திரஜித்
சுரேஷ்குமார இந்திரஜித் (பி. 1953) ராமேஸ்வரத்தில் பிறந்து, மதுரையில் வளர்ந்து படித்தவர். மதுரை வருவாய்த்துறையில் சிரஸ்தாராகப் பணியாற்றி 2011இல் ஓய்வு பெற்றவர். மனைவி: மல்லிகா, மகள்கள்: அபிநயா, ஸ்ரீஜனனி. தொடர்புக்கு: sureshkumaraindrajith@gmail.com
திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கின்றது. திராவிட இயக்கத்தின் சமூக அடித்தளம், கருத்தியல் உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் வழிசெய்கின்றது. கிடைப்பதற்கரிய அக்கால நூல்கள், இதழ்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் முதலான ஆதாரங்களோடு வாதிடும் இந்நூல், தமிழகச் சமூக வரலாற்றுக்கும் சிந்தனை வரலாற்றுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும். ஆ. இரா. வேங்கடாசலபதியின் விறுவிறுப்பான நடையில்...
ச. தமிழ்ச்செல்வன்
ச. தமிழ்ச்செல்வன் (பி. 1954) விருதுநகர் மாவட்டம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர். இவரது முதல் கவிதை 1972இல் கோவில்பட்டியில் வெளியான ‘நீலக்குயில்’ என்ற இலக்கிய இதழிலும், முதல் சிறுகதை 1978இல் ‘தாமரை’ இதழிலும் வெளியாகின. கட்டுரை, சிறுகதைத் தளங்களில் இயங்கி வருபவர்; இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். ‘வெயிலோடு போய் . . .’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. சிவகாசியில் வசிக்கிறார்.
நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின் இதிகாசம்’. மலையாள நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்தான். மலையாள நவீனப் புனைவிலக்கியத்தில் ‘கசாக்கின் இதிகாசம்’ மூன்று நிலைகளில் முன்னோடி இடத்தை வகிக்கிறது. ஒன்று: அதுவரை பின்பற்றி வந்த நாவல் வடிவத்தை முற்றிலும் மாற்றியது. பன்மைக் குரல்கள் வெளிப்படும் கதையாடலை முன்வைத்தது. தொன்மங்களும் நாட்டார் கதைகளும் உளவியல் துணைப்பிரதிகளும் கொண்ட பரந்ததும் ஆழமானதுமான கதையாடலை அறிமுகம் செய்தது. இரண்டு: படைப்பு மொழியை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. ஆரம்பகால நாவலாசிரியரான சி.வி. ராமன்பிள்ளைக்கும் மறுமலர்ச்சிக் கால எழுத்துக் கலைஞரான வைக்கம் முகம்மது பஷீருக்கும் பிறகு இந்த நாவல் வாயிலாக ஓ.வி. விஜயனே படைப்பு மொழியைத் தனித்துவப்படுத்தினார்; புதிய தளங்களுக்குக் கொண்டு சென்றார். மூன்று: எதார்த்தத்தின் மீது மாயங்கள் நிறைந்த கதைத்தளத்தை இந்த நாவலே உருவாக்கியது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் மாய எதார்த்தவாதம் அறிமுகமான அதே கால அளவில் அந்தப் போக்குக்குச் சமாந்தரமான ஒன்று ‘கசாக்கின் இதிகாசம்’ மூலமாகவே வெளிப்பட்டது. இந்திய மொழி நாவல்களிலேயே ஓர் அற்புதம் என்று சிறப்பிக்கப்படும் ‘கசாக்கின் இதிகாசம்’ முதன்முதலாகத் தமிழில் வெளிவருகிறது. நவீன கவிதையிலும் நாவலிலும் தனது வலுவான பங்களிப்பைச் செய்திருக்கும் யூமா வாசுகியின் மொழியாக்கம் நாவலை ஒளிகுன்றாமல் உயிர்ப்புடன் முன்வைக்கிறது.
ஓ.வி. விஜயன்
ஓ.வி. விஜயன் (1930 - 2005) எழுத்தாளர், பத்திரிகையாளர், கார்ட்டூனிஸ்ட், அரசியல் சிந்தனையாளர் என்று அறியப்படும் ஓவ்வுப் புலாக்கல் வேலுக்குட்டி விஜயன் பாலக்காடு மாவட்டம் விளையன் சாத்தனூரில் பிறந்தார். மலபார் போலீசில் பணியாற்றிய தந்தையின் இடமாற்றங்கள் காரணமாக வெவ்வேறு பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் பி.ஏவும் சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியமும் பயின்றார். கும்பகோணத்தில் கல்லூரி ஆசிரியராகக் குறுகிய காலம் பணியாற்றினார். தில்லி சென்று சங்கர்ஸ் வீக்லி யில் கார்ட்டூனிஸ்டாகவும் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து பேட்ரியாட், ஸ்டேட்ஸ்மென் இதழ்களில் பங்கேற்றார். கசாக்கின் இதிகாசம் நீங்கலாக ஐந்து நாவல்களையும் (தர்மபுராணம், குரு சாகரம், மதுரம் காயதி, பிரவாசன்டெ வழி, தலமுறகள்) ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். நீண்ட கால தில்லி வாழ்க்கைக்குப் பிறகு கோட்டயத்துக்கு இடம்மாறி வந்தார். இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பார்க்கின்ஸன் நோய்ப் பாதிப்புக்குள்ளாகி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். விஜயனின் இறுதிக் காலம் ஹைதராபாத்தில் கழிந்தது. அங்கேயே, 2005 மார்ச் 30 அன்று மறைந்தார். மனைவி தெரெசா. மறைந்துவிட்டார். ஒரே மகன் மது அமெரிக்காவில் வசிக்கிறார். கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாகித்திய அக்காதெமி, கேரள அரசின் உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருது உட்படப் பல விருதுகள் பெற்றார். 2003ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மபூஷண் விருது ஓ.வி. விஜயனுக்கு வழங்கப்பட்டது.
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘காகித மலர்கள்’ நமக்கு அளிக்கும் சித்திரம். இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது. (முன்னுரையிலிருந்து)
ஆதவன்
கல்லிடைக்குறிச்சியில் பிறந்த ஆதவனின் இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். இந்திய ரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றியபின் தில்லியில் உள்ள ‘நேஷனல் புக் டிரஸ்’டின் தமிழ்ப் பிரிவில் துணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987 ஜூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய ஆதவன், தமிழ்ச் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். இவர் எழுதிய ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்திய அக்காதெமி (1987) விருது வழங்கப்பட்டது. இவரது பலப் படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்ய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. மனைவி: ஹேமலதா சுந்தரம் மக்கள்: சாருமதி, நீரஜா
வைணவத் திருப்பதிகளில், திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் தெய்வத் தொண்டுள்ளுள் ஒன்று கைசிக நாடகம். அவ்வூரிலேயே நடந்த தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு பெருந்தெய்வக் கோவில் வளாகத்துள் நடைபெறும் ஒரே ஒரு நாடகம் என்ற தனித்துவம் இதற்கு உண்டு. கோவில் நாடக அரங்கப் பிரதி ஒன்றை ஆவணப்படுத்தல் என்பதற்கப்பால் பாரம்பரிய பனுவல் ஒன்றினை எதிர்காலத்திலும் நிலைநிறுத்தும் பணியாக இந்நுநூல் அமையும்.
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் என்னும் முறையில் பல்வேறு நூல்களை அசோகமித்திரன் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார். தான் வாசித்த ஒரு நூலை முன்வைத்துத் தன்னுடைய இலக்கிய மேதமையைப் பறைசாற்றிக்கொள்ளும் போக்கு மதிப்புப் பெற்றுவரும் ஒரு காலகட்டத்தில் நூலை முன்னிறுத்திப் பேசும் அசோகமித்திரனின் கட்டுரைகள் பெரும் ஆறுதல் அளிக்கின்றன. உணர்ச்சிவசப்படாமல் நூல்களை அசோகமித்திரன் அறிமுகப்படுத்துகிறார். படைப்புகளைக் காலத்தின் பின்னணியில் பொருத்திக்காட்டுகிறார். சிறப்புகளை மிகையின்றிச் சொல்கிறார். போதாமைகளைக் கூடியவரை நுட்பமாகச் சொல்லும் அசோகமித்திரன், ஒரு சில இடங்களில் வெளிப்படையாகச் சொல்லும்போதும் காரமான சொற்களைப் பயன்படுத்துவதில்லை. எந்த ஒரு நூலைப் பற்றியும் ஒவ்வொருவரும் தன்னுடைய வாசிப்பின் மூலம் முடிவுக்கு வர வேண்டும் என்று நம்பும் அசோகமித்திரன் தன் வாசிப்பின் முடிவுகளை வாசகர்களிடத்தில் திணிக்காமல் நூல்களைப் பற்றிப் பேசுகிறார். எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் கலாபூர்வமான, கச்சிதமான சொற்சித்திரங்களாக உருப்பெற்றிருக்கின்றன. பல சித்திரங்கள் சிறுகதைக்கு இணையாக உள்ளன. படைப்பாளிகளின் தனிப்பட்ட ஆளுமைகளைப் பற்றிச் சொல்லும்போது அவர்கள் படைப்பைப் பற்றிய தன் பார்வையையும் இயல்பாக அதில் இணைத்துவிடுகிறார். எளிய கோடுகளால் ஆன இந்தச் சித்திரங்கள் அழிக்க முடியாமல் மனத்தில் பதிந்துவிடக்கூடியவை.
சுந்தர ராமசாமியை ஈர்த்த மிகச் சில அரசியல் தலைவர்களிடையே மறுபரிசீலனைகளில் சிறிதளவும் தன் ஆளுமையின் மதிப்பை இழக்காதவர் ஜீவா. தான் சார்ந்த இயக்கத்தின் மீது எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டியிருந்த சு.ரா.வின் நட்பு ஜீவாவுக்குத் தேவையாகவே இருந்தது. தன்னுடைய கொள்கைகளை எவர் மீதும் திணிக்காமலும் அதே சமயம் அவற்றை விட்டுக்கொடுக்காமலும் தோழமையைத் தக்கவைத்துக்கொண்ட ஜீவாவின் கம்பீரத்தை சு.ரா. பதிவுசெய்கிறார்.
களம் சார்ந்த கதைகள் தமிழுக்குப் புதிதல்ல. திரைப்படங்களைக் காண்பதற்கான ஒரே
வழிமுறையாகத் திரையரங்கங்கள் இருந்த காலத்துத் திரையரங்க வளாகம் ஒன்றைச்
சுற்றி எழுப்பப்பட்டுள்ள ‘நிழல் முற்றம்' என்னும் நாவலின் களம் தமிழ்ப் புனைவுலகிற்குப்
புதியது. எழுதி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மங்காமல் ஒளிவீசும் புதுமை இது.
சிறு நகரம் ஒன்றின் திரையரங்க வளாகத்தில் புழங்கும் மனிதர்களும் அங்கு நிகழும்
வாழ்வின் சலனங்களும் ஒரு காலகட்டத்தையும் குறிப்பிட்ட இடத்தையும் சார்ந்த தமிழ்
வாழ்க்கையின் குறுவடிவமாகவே தோற்றம் கொள்கின்றனர்.
மாய நிழல்கள் அசையும் திரையைச் சுற்றிலும் இயங்கும் யதார்த்த வாழ்வு ஓராயிரம்
திரைப்படங்களுக்கான கருக்களைச் சுமந்திருப்பதை இந்தச் சிறு நாவல் காட்டுகிறது.
பெருமாள்முருகன்
பெருமாள்முருகன் (பி. 1966) படைப்புத்துறைகளில் இயங்கிவருபவர். அகராதியியல், பதிப்பு ஆகிய கல்விப்புலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரமணியனும் ஒருவர். இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ சித்திரிப்பையோ காண இயலாது. இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காகவோ வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்துபார்க்கும் எல்லைக்கு வெளியே அமர்ந்திருக்கிறார். யதார்த்தச் சித்திரிப்புகளின் மூலம் நித்திய மதிப்புமிக்க கதைகளை எழுதவல்லவராக மிளிர்கிறார். மிக எளிமையானதொரு கதைக்களத்தில் ஊடுருவித் துல்லியமான படைப்பை மொழிக்குக் கையளித்து விடுகிறார்.
தனது கதையுலகின் அலங்காரமற்ற நேரடித்தன்மையையும், படைப்பின் மொத்த ஆகிருதியை வாசகனுக்கு ஊட்டிவிடத் துடிக்காத நுட்பத்தையும், பொறுமையையும் மகத்துவமான எழுத்தாளர் அசோகமித்திரனிடம் இருந்தே கார்த்திக் பாலசுப்ரமணியன் பெற்றுக்கொள்கிறார் எனக்கருதுகிறேன். ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ புத்தாற்றலும் உத்வேகமும் கொண்டதொரு தலைமுறையின் அர்த்தபூர்வமானதும் அடர்த்திமிக்கதுமான பிரதி. மொழியும் படைப்பாளனும் பிரகாசிக்கட்டும்!