Your cart is empty.
காபூல்மீது செவ்வானம்
-1970களின் இறுதியில் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது ரஷ்யா. அங்கு அது ஏற்படுத்திய அரசியல் குழப்பங்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்களின் விளைவாகப் போர்த் தரகர்கள் எழுச்சி பெற்றார்கள். தீவிரவாதம் செழித்தது. கொலை, கொள்ளை, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகின. கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் தனிமனித உரிமைகளும் முடங்கின.
இந்தப் பிரச்சினைகளால் பந்தாடப்பட்ட ஒருவன் எவ்வாறு ரஷ்யப் படைகளிடமிருந்து தப்பித்து, வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, இறுதியாக அமெரிக்காவில் குடிபுகுந்து, அங்கே தன்னுடைய வாழ்வையும் குடும்பத்தையும் மீண்டும் கட்டமைக்கிறான் என்பதைச் சாகச நாவல்களுக்கே உரிய தன்மையுடன் சொல்கிறது இந்நூல். ஒரே சமயத்தில் அனுபவப் பதிவாகவும் பயண இலக்கியமாகவும் திகழும் இப்படைப்பு ஆதிக்க சக்திகளின் நடவடிக்கைகள் பற்றியும் தீவிரவாதத்தின் பரிணாமத்தைப் பற்றியுமான நமது அறிதலை விரி வுபடுத்தக்கூடியது.

