Your cart is empty.
ஆன்ம வணிகன்
தனது கடந்தகால சுயத்தை அறியும் பொருட்டு முன்பு மேற்கொண்ட பயணங்களின் பாதையில் மீண்டும் பயணிக்கும் கதைசொல்லி, தான் முன்பின் அறிந்திராத ஒரு தீவில் தங்க நேர்கிறது. பண்டைய மரபுகளிலிருந்து நவீனத்துக்கு மாறிக்கொண்டிருக்கும் அந்தத் தீவின் விசித்திரமும் மர்மமுமான நிகழ்வுகளை அவர் பின்தொடர்கிறார்.
இந்தோனேசியாவில் உள்ள சிம்பா என்னும் சிறிய தீவில் நடக்கும் நிகழ்வுகளே 'ஆன்ம வணிகன்' நாவலின் களம். நவீன வாழ்க்கை முறையும் நம்பிக்கையின்பாற்பட்ட பண்டைய வழக்கங்களும் பொருதும் புள்ளியே இதன் மையம். சுவாரஸ்யமான மனிதர்கள், அவர்களைக் காட்டிலும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் என விரியும் இந்த நாவல், முற்றிலும் புதிய வாழ்க்கை முறைகளைக் கொண்ட விசித்திர நிலப்பகுதிக்குள் பயணித்து அதை உள்ளார்ந்து அறியும் உணர்வைத் தருகிறது.
கீழைத்தேய வாழ்க்கை முறைகளின் வழக்கங்களையும் சடங்குகளையும் மேலைத்தேயப் பார்வையுடன் தனது படைப்புகளில் கையாள்பவர் இவால்ட் ஃப்ளிஸர். கீழைத்தேயப் பண்பாட்டுக் கூறுகளின் விநோதத்திற்காக அல்லாமல், அவற்றுடன் பிணைந்த அகவாழ்வையும் விழுமியங்களையும் அவை நிகழும் நிலத்துடன் பொருத்தி முன்னிலைப்படுத்துபவர். அவருடைய இந்த நாவலும் இதே வழியில் பயணம் செய்கிறது.











