-1930களின் பிற்பகுதி, ஸ்பெயினில் கடுமை யான உள்நாட்டுப் போர் மூள்கிறது. இந்தக் கொந்தளிப்பான சூழலிலிருந்து தப்ப லட்சக்கணக்கான மக்கள் மலைகள் வழியாகப் பயணம் மேற்கொள்கிறார்கள். கர்ப்பிணியும் இளம் விதவையுமான ரோஸரும் அவர்களில் ஒருத்தி. இறந்த தனது காதலனின் சகோதரனும் இராணுவ மருத்துவருமான விக்டர் தல்மாவின் வாழ்க்கையுடன் அவள் வாழ்க்கை பின்னிப் பிணைந்திருக்கிறது.
கவிஞர் பாப்லோ நெரூடா ஏற்பாடுசெய்த கப்பலில் இரண்டாயிரம் அகதிகளுடன் ரோஸரும் விக்டரும் சிலிக்குப் புறப்படுகிறார்கள். ஐரோப்பாவின் பிற பகுதிகள் உலகப் போரில் சிக்கியிருக்கும் போது இவர்கள் போரிலிருந்து தப்பி வேறொரு நாட்டில் அடைக்கலமாகிறார்கள். புதிய நாடு, புதிய அரசியல் சமூகச் சூழல் என அவர்களது வாழ்க்கை அடியோடு மாறுகிறது.
சுதந்திரத்திற்கும் அடக்குமுறைக்கும் இடையிலான போருக்கிடையில் துளிர்க்கும் உறவுகளையும் உறவின் மாறாட்டங்களையும் அவற்றின் விளைவுகளையும் இந்த நாவல் விவரிக்கிறது. போர்கள் அரசியல் அரங்கில் மட்டுமின்றிப் பண்பாட்டுத் தளத்திலும் தனிநபர்களின் வாழ்விலும் பார்வையிலும் ஏற்படுத்தும் ஆழமான மாற்றங்களையும் உணர்த்துகிறது.
ISBN : 9789361105579
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 420.0 grams
லோகமாதேவி (அதழ் இணையதளம்)
18 Sep 2025
ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் வரலாற்றுக் களத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆழமான மனித உறவுகளை வெளிப்படுத்தும் இந்த நீண்ட புனைகதையின் மொழிபெயர்ப்பு, மூலப் படைப்பின் உணர்ச்சி ஆழத்தையும் கலாச்சார நுணுக்கங்களையும் பாதுகாத்துத் தமிழ் வாசகர்களிடையே கொண்டு செல்ல வேண்டிய ஒரு சவாலையும் மொழிபெயர்ப்பாளருக்கு அளித்திருக்கிறது. அதில் சுபஸ்ரீ பீமன் வெற்றி கண்டுள்ளார்.
மூல நூலின் கவிதையின் சாயல் கொண்ட எழுத்துநடை, கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான இயல்புகள், ஆழமான உணர்வுப் பதிவுகள், மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் துல்லியமான விவரிப்புகள் ஆகிய அனைத்தும் மொழிபெயர்ப்பிலும் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. சுபஸ்ரீக்கு அன்பும் வாழ்த்துக்களும்.”
‘கடலின் நீண்ட இதழ்’ – இசபெல் அயந்தே எழுதிய ஸ்பானிஷ் நாவலுக்கான மதிப்புரை. “உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் அரை நூற்றாண்டு கால வாழ்க்கையைப் பொதிந்துவைத்திருக்கிறது. நேரடியான ஒரு தமிழ் நாவலை வாசிக்கும் உணர்வை சுபஸ்ரீ பீமனின் தங்குதடையற்ற மொழிபெயர்ப்பு தருவது இந்நாவலின் பலம்.” நன்றி: ஏக்நாத் (இந்து தமிழ் திசை)