Your cart is empty.
கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் (1951-1970)
எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நாட்குறிப்பு இது. நவீன --தமிழ் எழுத்தாளர் ஒருவரது நாட்குறிப்புகள் நூலாக வெளிவருவது இது முதல்முறை.
எழுத்தை மட்டுமே ஜீவனமாகக் கொண்டு வாழ்ந்த, முற்போக்குச் சாய்வுள்ள, முழுநேரத் தமிழ் எழுத்தாளரின் நாட்குறிப்புகள் இந்நூல்.
ஒவ்வொரு நாட்குறிப்பிலும் உணர்ச்சி கலந்திருக்கிறது; அனுபவம் உள்ளோடியிருக்கிறது; இலக்கியம் வெளிப்படுகிறது; சுவாரசியம் குமிழ்விடுகிறது. சந்தித்த மனிதர்கள், நேர்ந்த சம்பவங்கள் பற்றி ஆழமான பார்வைகள் கொண்டது, பல சமயம் கண்ணிவெடிகளை ஒத்த விமர்சனங்களுடன் கூடியது.
நெருப்பெனச் சுடும் வாழ்க்கையை எதிர்கொண்ட, அறத்தில் நம்பிக்கையுள்ள ஒரு கலைஞனின் தினசரிக் குறிப்புகள் இவை.
