Your cart is empty.
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்
-
தமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப் பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னே மேலும்
பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவ மேலும்
உ.வே. சாமிநாதையர் ‘ஆனந்த விகட’னில் தொடராக எழுதிய நூலாயிற்று. பலமுறை அச்சாகியுள்ள இந்நூலின் செம்ப மேலும்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தனின் வாழ மேலும்
தமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப் பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறியமாட்டார்கள். புனைவு வடிவில் பாரதி எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும், ‘கனவு’ என்ற கவிதை வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல். கழிவிரக்கம் மிகுந்த பிரதியாகக் ‘கனவு’ இருக்க, தமிழ் இலக்கிய வரலாற்றில் நகைச்சுவை மைல்கல்லாக விளங்குகிறது ‘சின்னச் சங்கரன் கதை’. பாரதியியலுக்கு முக்கியப் பங்காற்றியுள்ள ஆ. இரா. வேங்கடாசலபதி காலச்சுவடு கிளாசிக் வரிசைக்கு இவ்விரு பிரதிகளையும் தொகுத்தளித்து விரிவான முன்னுரையை எழுதியிருக்கிறார்.
ப.ர்: ஆ.இரா. வேங்கடாசலபதி
ஆ. இரா. வேங்கடாசலபதி தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகக் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் செய்துவருபவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக இருக்கும் இவர், மனோன்மணியம் சுந்தரனார் (திருநெல்வேலி), சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியிருக்கிறார். வி.கே.ஆர்.வி. ராவ் விருதும் (2007) விளக்கு புதுமைப்பித்தன் விருதும் (2018) பெற்றிருக்கிறார்.
பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவுகூர்வார்கள். 1928இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது ‘சென்றுபோன நாட்கள்’ தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஒரு ‘கிளாசிக்’ ஆகும். 1926-1934இல் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு எழுதிய ‘சென்றுபோன நாட்கள்’ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது. முதல் முறையாக இப்பொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை - இவை இந்த நூலின் சிறப்புகள். பல்லாண்டுக்காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சி யின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ.இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஒரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார். A collection of articles written by S.G. Ramanujalu Naidu. Who is widely credited with writing the first detailed article on Subramania Bharathi. In 1928, when Bharathi's book was banned by the Government, he wrote the classic essay on Bharathi. ‘Sendru pona naatkal’ These series of articles written under the title ‘Sendru pona naatkal’ contain articles on eighteen legendary journalists/creators. This collection is now compiled and introduced by A.R.VenKatachalapathy.
எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு
எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி ‘கதை சொல்வதில் சமர்த்தர்’ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு (1886 - 1935). பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவுகூர்வார்கள். 1928இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது, ‘சென்றுபோன நாட்கள்’ தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை, ஒரு ‘கிளாசிக்’ ஆகும். 1926 - 1934இல் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு எழுதிய ‘சென்றுபோன நாட்கள்’ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது. முதல்முறையாக இப்பொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை - இவை இந்த நூலின் சிறப்புகள். பல்லாண்டுக் காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ.இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஒரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார். இவர் தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகக் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் செய்துள்ளவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக இருக்கும் சலபதி, மனோன்மணியம் சுந்தரனார் (திருநெல்வேலி), சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக் கழகங்களில் பணியாற்றியிருக்கிறார்.
உ.வே. சாமிநாதையர் ‘ஆனந்த விகட’னில் தொடராக எழுதிய நூலாயிற்று. பலமுறை அச்சாகியுள்ள இந்நூலின் செம்பதிப்பு இது. இதழில் வெளியான தொடரின் மூல வடிவு, அதில் இடம்பெற்ற படங்கள், அரிய தேடலால் கிடைத்த புதிய படங்கள், ‘என் ஆசிரியப்பிரான்’ இணைப்பு, பொருளடைவு என இன்றைய வாசகருக்குப் பயன்படும் பல அம்சங்களை இப்பதிப்பு கொண்டிருக்கிறது. தன் வரலாற்றுக்கு வகைமாதிரியாக விளங்கும் இந்நூல் தமிழ்ப் புலமை வரலாறு, சமூக வரலாறு, கல்வி வரலாறு, உரைநடை வரலாறு, பதிப்பு வரலாறு உள்ளிட்டவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது. பல்வேறு நுட்பங்களையும் உள்ளடுக்குகளையும் கொண்டு பயில்வோருக்குப் புதுப்புதுக் கோணங்களைக் காட்டியபடி காலத்திற்கேற்பப் புதிதாகி மிளிர்ந்தகொண்டேயிருக்கும சிறப்புடையது இந்நூல். தமிழ் மறுமலர்ச்சி பெற்ற காலத்தில் ஆதாரப் பதிவுகளோடு மிக எளிதாகவும் ஆர்வத்துடனும் வாசிப்பதற்கேற்ற மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் தமிழ்ச் சாதனையாகிய இந்நூலை வாசிப்பது மட்டுமல்ல, இதனோடு உறவாடுவதும் தமிழர் கடமை. - பெருமாள்முருகன்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் கதை இது. ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இந்த வரலாற்றைப் படித்த வாசகர்கள் புதுமைப்பித்தனின் ஆவி ரகுநாதனிடம் குடிகொண்டுவிட்டது என்று நம்பிவிட்டனர் என்று பாராட்டியிருக்கிறார் சுந்தர ராமசாமி. 1951இல் முதலில் வெளியான இந்நூலுக்கு விரிவான முன்னுரை, ஆய்வுக் குறிப்புகள், படங்களுடன் மறுபதிப்பைத் தயாரித்திருக்கிறார் புதுமைப்பித்தன் படைப்புகளுக்குச் செம்பதிப்புகளை உருவாக்கியுள்ள ஆ.இரா. வேங்கடாசலபதி