Your cart is empty.
அசோகமித்திரன் குறு நாவல்கள்
அசாதாரணமான நிகழ்வுகள், மகத்தான மனிதர்கள், பிரமிக்கவைக்கும் தருணங்கள், தத்துவ விசாரங்கள் முதலான எதுவும் இல்லாமலேயே மிகச்செறிவான இலக்கிய அனுபவத்தைச் சாத்தியமாக்குபவை அசோகமித்திரனின் புனைகதைகள்.
சிறப்பான சொல்லாக்கங்களோ அசரவைக்கும் மொழிநடையோ, வசீகரமான வர்ணனைகளோ இல்லாமலேயே அசோகமித்திரனின் எழுத்து மகத்தான இலக்கிய அனுபவத்தைத் தந்துவிடுகிறது.
அசோகமித்திரனின் குறுநாவல்கள் அவருடைய எல்லாப் புனைகதைகளையும் போல எளிய பின்புலத்தைக் கொண்ட எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வைப் பற்றியவை என்றாலும் படைப்பு என்ற அளவில் அடர்த்தியும் ஆழமும் கொண்டவை.
சிறுகதைக்கும் நாவலுக்கும் இடைப்பட்ட வடிவமான குறுநாவல் வடிவத்தைக் கச்சிதமாகக் கையாண்டுள்ளார் அசோகமித்திரன். அவருடைய குறுநாவல்கள் அனைத்தும் வாசகரைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. படித்து முடித்த பிறகு ஆழமாக யோசிக்கவைப்பவை.

