Your cart is empty.
புளித்த அப்பம்
-தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் வாழ்வு நவீன தமிழிலக்கியத்தில் அதிகம் பதிவாகவில்லை. அந்த வெளியில் தற்போது புத்தம் புதிதாகப் பிரவேசிக்கிறார் ஜார்ஜ் ஜோசப். இவரது கதைகள் வலுவான சம்பவங்களைக் கொண்டவை. அந்தச் சம்பவங் களைக் கதைகளாக்கும் கலைத்திறனும் மொழி ஆளுமையும் ஜார்ஜுக்கு இருக்கின்றன. எந்தக் கதையையும் குறிப்பிட்ட பாத்திரத்தின் கோணத்தில் மட்டும் சொல்லாமல் கூடியவரையில் பலரது கோணங்களையும் கொண்டுவந்துவிடுகிறார். அவ்வகையில் இவரது கதையாடல் இயல்பாகவே பன்முகத்தன்மை பெற்றுவிடுகிறது. இத்தொகுப்பில் உள்ள மூன்று குறுநாவல் களும் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தருவதோடு சமகால வாழ்வின் பரிமாணங்களையும் உணர்த்துகின்றன.











