Your cart is empty.
அமர நாயகன் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் வரலாறு)
-இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோசின் அறிவார்ந்த வாழ்க்கை வரலாற்று இது. நேதாஜியின் அரசியல், சமூக, தார்மீக உறுதிப்பாடுகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது.
நூலாசிரியர் சுகதோ போஸ் கல்கத்தா, கேம்பிரிட்ஜ் ஆகியவற்றைச் சார்ந்த அறிவுசார் சூழலில் நேதாஜி உருவான விதத்தை அற்புதமாகச் சித்தரிக்கிறார். தேசியவாத அரசியலின் உச்சத்தை அவர் எட்டியதை விளக்குகிறார். இந்துக்கள், முஸ்லிம்கள், ஆண்கள், பெண்கள், பல்வேறு மொழியியல் குழுக்கள் ஆகியோரை ஒரே சுதந்திர இந்திய தேசத்திற்குள் ஒன்றிணைக்கும் நேதாஜியின் லட்சியப் பார்வையைத் தெளிவாகத் தீட்டிக்காட்டுகிறார். அவர் மரணம் பற்றி இந்த நூல் தரும் தகவல் இந்த அமர நாயகன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
நேதாஜியின் வாழ்க்கை விறுவிறுப்பாகவும் நுண்ணுணர்வுடனும் அந்தக் காலகட்டத்து அரசியல் குறித்த தெளிவான பிரக்ஞையுடனும் பதிவாகியுள்ளது. ஆதாரபூர்வமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த நூல் நேதாஜியையும் அவரது காலத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது.
நூலாசிரியர் சுகதோ போஸ் ஹார்வர்ட் பல்கலையில் மூத்த வரலாற்றுப் பேராசிரியர். அப்பல்கலை வெளியிட்டுள்ள நூலின் தமிழாக்கம் இது.
இதழாளர் ந. வினோத்குமார் சரளமான நடையில் இந்த நூலைத் தமிழில் தந்திருக்கிறார்.