Your cart is empty.
மனவளர்ச்சிக் குறைபாடுகள்
இந்நூல் ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடு, கற்றல் குறைபாடு ஆகிய மூன்று மனவளர்ச்சிக் குறைபாடுகள் பற்றித் தெளிவாகவும் துல்லிதமாகவும் பேசுகிறது. குறிப்பாக, இந்தக் குறைபாடுகளின் அறிகுறிகள் என்ன? இவைப்பற்றிச் சமகால ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன? இவற்றை அடையாளம் காண்பது எப்படி? இவற்றின் உயிரியல் உளவியல் காரணங்கள் என்ன? இந்தப் பாதிப்புகளுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? இதில் ஆசிரியர்களின் பங்கு என்ன? சிறப்புக் கல்வி என்றால் என்ன? இந்தக் குறைபாடுகளுடைய எல்லாக் குழந்தைகளுக்கும் சிறப்புப் பள்ளிக்கூடங்கள் தேவையா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகாண முற்படுகிறது இந்நூல். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்தரக்கூடிய எடுத்துக்காட்டுகளும் ஆலோசனைகளும் உதவிக் குறிப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.