Your cart is empty.
பாரதியின் இறுதிக்காலம்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். அச்சம்பவத்தின் தாக்கத்தில் ‘கோவில் யானை’ எனும் நாடகத்தைப் பாரதி எழுதினார். பாரதி நூலெதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும் இந்நூல் பாரதியியலில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது. ஆ. இரா. வேங்கடாசலபதி
ஆய்வும் பதிப்பம்: ய. மணிகண்டன்
தமிழ் யாப்பியல், சுவடிப்பதிப்பியல், பாரதியியல், பாரதிதாசனியல் ஆகிய களங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நிகழ்த்தியுள்ள முனைவர் ய. மணிகண்டன் தஞ்சை சரசுவதி மகால் நூலகத் தமிழ்த் துறையில் பத்தாண்டுகளுக்கும்மேல் பணியாற்றியவர்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறையில் பன்னிரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர். ‘தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி’, ‘நேரிசை வெண்பா இலக்கியக் களஞ்சியம்’, ‘பாரதிதாசன் யாப்பியல்’, ‘பாரதிதாசனின் அரிய படைப்புகள்’, ‘பாரதிதாசன் இலக்கியம்: அறியப்படாத படைப்புகள்’, ‘மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும்’, ‘ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள்’, ‘பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள்’, ‘மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்’ உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை ஆக்கியவர்.