Your cart is empty.
அ. இரவி
பிறப்பு: 1960
யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தார். மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்ற இரவி, 1982இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று, 1986இல் சிறப்புக் கலைமாணி (B.A. Tamil Honours) பட்டத்தினைப் பெற்றார். பின்னர் 1988இல் தொடங்கி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரங்கியல் பயின்று, 1992இல் முதுகலைமாணி (M.A.) பட்டத்தினைப் பெற்றார். 1995இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் (Diploma in Education) பட்டம் பெற்றார். பத்து வருட காலம் இலங்கையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். புதுசு, சரிநிகர், புலம், ஒருபேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவர். ஐபிசி தமிழ் வானொலி (லண்டன்), டிடிஎன் தமிழ் ஒளி தொலைக்காட்சி (பிரான்ஸ்) ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இருபதாவது வயதில் எழுதத் தொடங்கி, இன்றுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். மனைவி (சுசீலா), மைந்தர் (சஞ்சயன், சஞ்சுதன்) இவர்களுடன் லண்டனில் வசிக்கிறார்.