Your cart is empty.
பயணி தரன்
பிறப்பு: 1966
பயணி தரன் (பி. 1966)
பயணி என்னும் புனைபெயர் கொண்ட ஸ்ரீதரன் மதுசூதனன், சென்னையைச் சேர்ந்தவர். 1996இல் இந்திய வெளியுறவுப் பணியில் (Indian Foreign Service) சேர்ந்து, பெய்சிங்கில் சீன மொழி கற்றவர். ஒன்பது ஆண்டுகள் பெய்சிங்கிலும் ஹாங்காங்கிலும், பிறகு ஃபிஜித் தீவுகளிலும், வாஷிங்டனிலும் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றிவிட்டு, தற்போது தாய்வானில் இந்திய அலுவலகத்தின் தலைவராகப் பணிபுரிகிறார்.
1984இல் விகடனில் மாணவப் பத்திரிகையாளராக சேர்ந்து, பின்பு ‘பிரம்மா செய்திக் கட்டுரைகள்’ எனும் அமைப்பைத் துவக்கினார். ஐக்யா நாடகக் குழுவின் வழியே தமிழின் நவீன நாடகங்களில் பங்கேற்றார். கணையாழி, விகடன், கல்கி போன்ற இதழ்களில் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். கல்வியாராய்ச்சி இதழ்களில் தமிழ் அகராதியியல் மற்றும் இலக்கியத்துக்கும் இயற்கைக்குமான உறவு பற்றிய ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது நூல்கள்: ‘சீன மொழி – ஒரு அறிமுகம். ‘வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: கவித்தொகை – சீனாவின் சங்க இலக்கியம்’. நோபல் பரிசு பெற்ற மோயான் எழுதிய ‘மாற்றம்’ நாவலின் மொழிபெயர்ப்பு. 2016ஆம் ஆண்டுக்கான ஸ்பாரோ (SPARROW) இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.
பட்டப்படிப்பில் அறிவியலையும், மேல் பட்டப் படிப்புகளாக இதழியல், பொது நிர்வாகம், மனிதவள மேலாண்மை, வணிக மேலாண்மை ஆகியவற்றையும் பயின்றவர்.
மனைவி வைதேஹி, கல்வியாளர். மகன் அபி, இசைக்கலைஞர். மகள் கீர்த்தனா, மாணவி.
தொடர்புக்கு: msridharan@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை
கவித்தொகை சீன இலக்கிய வரலாற்றின் முதல் நூல். சீனாவின் அரசியல், கலை மற்றும் சமூக வாழ்வை நிர்ணயித் மேலும்
மாற்றம்
‘மாற்றம்’ குறுநாவல் வடிவத்தில் உள்ள ஒரு சுயசரிதை அல்லது சுயசரிதை வடிவத்தில் உள்ள ஒரு குறுநாவல் என மேலும்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை
கவித்தொகை சீன இலக்கிய வரலாற்றின் முதல் நூல். சீனாவின் அரசியல், கலை மற்றும் சமூக வாழ்வை நிர்ணயித் மேலும்