Your cart is empty.

சுந்தர ராமசாமி நேர்காணல்கள்-4
-இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் … மேலும்
-இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் பல்வேறு தருணங்களில் சுந்தர ராமசாமி அளித்த நேர்காணல்கள் இவை.
எதைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சொல்லையும் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் சு.ரா.வின் ஆளுமை இந்த நேர்காணல்களில் வெளிப்படுகிறது. சிந்தனையின் வீச்சும் ஆழ்ந்த கரிசனமும் கூடியவரை பிரச்சினையின் அனைத்துக் கோணங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அணுகுமுறையும் சு.ரா.வின் கருத்துலகின் அடிப்படைகள். அவற்றை இந்த நேர்காணல்களிலும் காணலாம். சு.ரா. முன்னிறுத்தும் வாழ்வின் விழுமியங்களுக்கும் இலக்கிய மதிப்பீடுகளுக்குமிடையில் இருக்கும் ஒற்றுமைகளையும் உணரலாம்.
மிகையற்ற, சுய பிம்பக் கட்டமைப்பில் நாட்டமற்ற, அசல் சிந்தனைகளைக் கொண்ட இந்த உரையாடல்களில் கேட்கும் உண்மையின் குரல் இந்த நேர்காணல்களைத் தனித்துக் காட்டுகிறது
ISBN : 9789380240409
SIZE : 0.0 X 0.0 X 0.0 cm
WEIGHT : 0.0 grams