Your cart is empty.
கௌரி கிருபானந்தன்
பிறப்பு: 1940
தாய்மொழி தமிழ், பயிற்றுமொழி தெலுங்கு. நாற்பது வயதுவரையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் படைப்புகளை வாசித்துவந்தவர். அதற்குப் பின் இலக்கியத்தின் மீது உள்ள ஆர்வத்தால் மொழிபெயர்ப்புத் துறையில் காலடியெடுத்து வைத்தார். ‘பூனாச்சி ஒரு வெள்ளாட்டின் கதை’, ‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘அன்பளிப்பு’, ‘வானம் வசப்படும்’ ஆகியவை இவருடைய மொழிபெயர்ப்பில் தெலுங்கில் வெளிவந்த தமிழ் நாவல்கள்.
கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் தன் வரலாற்று நூலின் (ஆளற்ற பாலம்) மொழிபெயர்ப்பு பெரும் கவனத்தைப் பெற்றது. ‘மீட்சி’ என்னும் கதைத் தொகுப்பிற்கு 2015ஆம் ஆண்டு இவருக்குச் சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டது.