Your cart is empty.
கே. நல்லதம்பி
பிறப்பு: 1949
கே. நல்லதம்பி (பி. 1949)
மொழிபெயர்ப்பாளர்
மைசூரில் படிப்பு B.A. வரை. ஒரு தனியார் நிறுவனத்தில் வணிகப் பிரிவின் அகில இந்திய மேலாளராக 35 வருடங்கள் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவர். நிழற்படக் கலையில் ஆர்வமிக்கவர். உலக, தேசியக் கண்காட்சிகளில் இவரது நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுப் பல பரிசுகளும் பெற்றிருக்கின்றன. இந்தியா லலித கலா அகாதெமியில் இவரது ஆறு புகைப்படங்கள் நிரந்தர அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மொழிபெயர்த்துள்ளார்; அவை பல கன்னட, தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
குவெம்பு பாஷா பாரதி வெளியீடுகளான பெரியார் விசாரகளு (2017), தெங்கனமஹிளா லேககரு (2016) தொகுப்புக்களில் தமிழ்க் கட்டுரைகள் கன்னடத்தில் மொழி
பெயர்த்து வந்துள்ளன. குவெம்பு பாஷா பாரதிக்காக – சங்கக் கவிதைகள் சிலவற்றைக் கன்னட எழுத்தாளர் லலிதா சித்தபசவய்யாவுடன் இணைந்து மொழிபெயர்த்திருக்கிறார். அவை ‘நிச்சம் பொசது’ (2016) என்ற தொகுப்பாக வந்துள்ளது. 2022ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். பெங்களூருவில் வசிக்கிறார்.
மின்னஞ்சல்: kntt1949@gmail.com
செல்: 9880718541