Your cart is empty.
எம். எஸ்
பிறப்பு: 1929-2017
எம்.எஸ். (1929-2017)
கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் கிராமத்தில் பிறந்தார். பள்ளி இறுதிவரை படித்த இவர் அரசு அலுவலகத்தில் சுமார் முப்பது ஆண்டுகள் பணிபுரிந்து 1987இல் ஓய்வு பெற்றார். இலக்கிய ஆர்வலரான இவர் சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்களின் நெருங்கிய நட்பைப் பெற்றிருந்தார். படைப்பாளிகளின் நூல்களை மிகுந்த ஆர்வத்துடன் படித்துப் பிழைதிருத்திச் செம்மைப்படுத்துவதில் ஆர்வம்கொண்டவர். ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலிருந்து பல நாவல்கள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு போன்றவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். ‘அமைதியான ஒரு மாலைப் பொழுதில்’, ‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை’, ‘ஜானு’, ‘கிழவனும் கடலும்’, ‘விடியலை நோக்கி’, ‘அன்டன் செக்கோவ் சிறுகதைகள்’, ‘ஆதியில் பெண் இருந்தாள்’, ‘புலியின் நிழலில்’ முதலானவை இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த நூல்கள். காலச்சுவடு போன்ற பல பதிப்பகங்களுக்கு இலக்கியச் சேவை புரிந்துவந்தார்.