Your cart is empty.
இரா. தமிழ்ச்செல்வன்
பிறப்பு: 1980
"இரா. தமிழ்ச்செல்வன் (பி. 1980)
கோவையில் பிறந்தவர். புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத் தமிழ்ப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுத் தற்போது சென்னை, இந்துக் கல்லூரியின் (சுழற்சி 2) தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். புணேயில் கொங்கணி மொழியை முறையாகப் படித்ததன் தொடர்ச்சியாகத் தனது இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வைக் கொங்கணி - தமிழ் மொழிபெயர்ப்புச் சார்ந்து மேற்கொண்ட இவர் கொங்கணியிலிருந்து தமிழுக்குப் படைப்புகளை நேரடியாக மொழிபெயர்த்து வருகிறார். இவர் மொழிபெயர்த்த கொங்கணிச் சிறுகதைகள் இதழ்களில் வெளியாகியுள்ளன.
கொங்கணி மொழியைத் தமிழுடன் தொடர்புபடுத்தி ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ள இவர் தற்போது சாகித்திய அக்காதமி நிறுவனத்திற்காகக் கொங்கணிப் புதினம் ஒன்றைத் தமிழாக்கி வருகிறார்.
நூல் வடிவில் வெளிவரும் இவரின் முதல் மொழிபெயர்ப்புப் படைப்பு இது.
தொலைபேசி: 08056831183
மின்னஞ்சல்: tamil.jnu@gmail.com"
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
யார் அறிவாரோ
கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு நூல்வடிவில் வெளிவரும் முதல் படைப்பு ‘யார் அறிவாரோ. மேலும்