Your cart is empty.
சரஸ்வதி காலம்
-“ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆசிரியராக இருந்த போதிலுங்கூட நண்பர் விஜயபாஸ்கரனால் என் கதைகள் என் விருப்பப்படி இருந்தால் போதும் என எவ்வாறு எண்ண முடிந்தது என்பதை நினைத்து இன்றுவரையிலும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். மகான்தான் அவர்.”
- சுந்தர ராமசாமி
அந்த ‘மகான்’ வ.விஜயபாஸ்கரன் நடத்திய அந்தத் தமிழ்ப் பத்திரிகையின் வரலாறுதான் வல்லிக்கண்ணன் எழுதிய இந்த ‘சரஸ்வதி காலம்’.
1955இலிருந்து 1962வரை வெளிவந்த ‘சரஸ்வதி’ இதழின் வரலாற்றை, சாதனைகளை விரிவாக விளக்கும் நூல் இது.
இலக்கியமாக மட்டுமல்லாது இதழியல் வரலாறாகவும் இந்நூல் விளங்குகிறது.