Your cart is empty.


சுந்தர ராமசாமி நினைவோடை
-எழுத்தாளர்கள், பல துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள், வாசகர்கள் ஆகியோருடன் நெருங்கிய நட்பைப் … மேலும்
-எழுத்தாளர்கள், பல துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள், வாசகர்கள் ஆகியோருடன் நெருங்கிய நட்பைப் பேணியவர் சுந்தர ராமசாமி. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா, என்.எஸ். கிருஷ்ணன், வெ. சாமிநாத சர்மா எனப் பலருடனும் பல ஆண்டுக்காலம் நட்புப் பாராட்டியவர். இந்த நட்புகளின் அனுபவங்கள் நினைவோடையாகப் பாய்கின்றன. இந்த நினைவோடையில் ஆளுமைகளின் சித்திரங்கள் துலங்குவதுடன் ஒரு காலகட்டத்து விழுமியங்களும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் பிரதிபலிக்கின்றன. அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதோடு நில்லாமல் பல்வேறு விஷயங்கள் குறித்த தன்னுடைய பார்வைகளையும் முன்வைத்தபடி பேசிச் செல்கிறார் சு.ரா. வெவ்வேறு சமயங்களில் பதிவான இந்த நினைவுகளில் க.நா.சு., சி.சு. செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா ஆகியோரைப் பற்றிய பதிவுகள் சு.ரா. உயிருடன் இருக்கும்போதே வெளியானவை. இந்தப் பதிவுகளின் எழுத்துப் பிரதியை அவரே கைப்படத் திருத்திக்கொடுத்தார். இந்த நான்கு நினைவோடைகள் மட்டும் தற்போது ஒரே நூலாக வெளியாகின்றன.
ISBN : 978-81-959781-1-3
SIZE : 16.0 X 2.0 X 21.4 cm
WEIGHT : 0.45 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பின்னகர்ந்த காலம்
-வண்ணநிலவனின் வாழ்க்கை அனுபவங்களின் பதிவு இது. பள்ளி, கல்லூரி
காலத்திலிருந்து தொடங்கி, அச மேலும்
நிலவைச் சுட்டும் விரல்
-இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும்
மனத்தின் பறத மேலும்