Your cart is empty.
சாலப்பரிந்து
நாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | கிளாசிக் சிறுகதைகள் | தமிழ் கிளாசிக் சிறுகதை |
நாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டு செழுமையும் ஆகும். பின்னைப் புதுமையை தாவிப் பற்றும் நாட்டத்தால் உயிர்ப்பான மரபினின்றும் தன் வேர்களை துண்டித்துக் கொண்டு விடாத தன்மையால், காருண்யத்தை நீதியுணர்வை விழுமியங்களை வற்புறுத்தும் வகைமையால் தனித்து நிற்பவை இவரது கதைகள். நாஞ்சிலின் நாற்பது வருடத்துக்கு மேலான எழுத்து வாழ்வின் தடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இத் தொகுப்பில் அவருடைய ஆகச் சிறந்த கதைகள் இடம்பெற்றுள்ளன. Selected short stories of Nanjil Naadan. Nanjil nadan is a Award winning writer in Tamil.
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் (பி. 1947) நாஞ்சில் நாடன் (க. சுப்பிரமணியம்) குமரி மாவட்டத்திலுள்ள வீரநாராயணமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். ‘தலைகீழ் விகிதங்கள்’ (1977) என்ற தம் முதல் நாவல் மூலம் இலக்கிய உலகில் பிரபலமானவர். ஆறு நாவல்கள், எட்டு சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கவிதைத் தொகுதிகள், ஆறு கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. நாஞ்சில் நாட்டு வாழ்க்கையையும் பெருநகர் வாழ்வின் அவலங்களையும் விவரிக்கும் நாஞ்சில் நாடன் கிராமிய வாழ்வின் மீது புனிதம் ஏதும் ஏற்றவில்லை. இழந்துபோன கிராமியத்தின் நிலைமையையும் தனது ஏக்கங்களையும் அவர் சுதந்திரமாக மறுபரிசீலனை செய்கிறார். இளமைப் பருவத்தைச் சொந்தக் கிராமத்திலும் பதினெட்டு ஆண்டுகள் மும்பையிலும் கழித்த நாஞ்சில் நாடன் தற்போது மனைவி, மகள், மகனுடன் கோவையில் வசிக்கிறார்.
ISBN : 9789381969304
SIZE : 13.8 X 1.1 X 21.5 cm
WEIGHT : 286.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்