நூல்கள்

அக்டோபர் மாதம் முழுவதையும் இரண்டு நாவல்களின் துணை கொண்டு கடந்தேன்.

இரண்டும் காதலை கரு பொருளாக கொண்டவை. பெருந்தொற்று புற சூழலை

உலுக்கும்போது காதல் போன்ற அக உணர்வில் ஏற்படும் ஆழமும் அகலமும் எத்தனை காலம்

நிலைத்திருக்க போகிறது என்பதை இரண்டும் பேசுவதாக பட்டது. 19ம் நூற்றாண்டில்

உலகை உலுக்கிய காலரா பெருந்தொற்றை தலைப்பாக கொண்ட Gabriel García Márquez

வின் நாவல் ‘Love in the times of Cholera’, 21ம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த கொரோனா

பெருந்தொற்றையும் பொதுமுடக்கத்தை களமாக கொண்டும் எழுதப்பட்ட நாவல் எழுத்தாளர்

பெருமாள் முருகனின் ‘நெடுநேரம்’. எனக்கு பிடித்த இரண்டு கதை சொல்லிகளின் கதைகளை

படித்து அக்கதைகளில் லயித்திருந்தது, இரண்டையும் சேர்த்து வைத்து ஒரு அறிமுகம்

எழுதலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அத்தகைய எண்ணத்தின் விளைவே

இக்கட்டுரை.

Gabuவின் நாவலின் கடைசி வரி ‘Forever’ என்று முடிகிறது, பெ.மு நாவலின்

தலைப்பும்(நெடுநேரம்) இதையே குறிக்கிறது. இவ்வுலகில் காதலை விட பெருந்தொற்று

ஒன்றுண்டா? காலம் கடந்தும் கடக்காத பெருந்தொற்றாக காதலே இருக்கிறது.

உலகெங்கிலும் பல உயிர்கள் காதலை காரணம் காட்டி பிரிய நேர்கிறது, இந்தியாவில் சாதி-

மத பைத்தியக்காரத்தனங்களால் காதலிக்கும் உயிர்கள் கொல்லப்படுகின்றன. ஆனால்

‘நெடுநேரம்’ விலகி இருந்தாலும், நிலைத்திருக்கும் தன்மை காதலுக்கே வாய்க்கிறது. தேடி

அலைந்து காதலை அடைந்த மனம் விலகினாலும் அங்கேயே தஞ்சம் அடைகிறது. Florentino

Ariza- Fermina Dazaவும், மதுரன்-மங்காசுரியும் காலம் கடந்து நிலைக்கும் காதலின்

பிரதிநிதிகள்.

Harry Potterல் Lilly Potter மீது Snape கடைசி வரை மாறாமல் கொண்டிருந்த அன்பை, ‘After

all this time’, ‘Always!’ என்ற வசனம் மெய்ப்பிக்கிறது. மாறாமல் இருக்கும் அன்பை

நிரந்தரமான தொற்று என்றும் சொல்லலாம். காதல் தான் மானுடத்தின் நிரந்தர தொற்று.

இவ்விரு நாவல்களும் பெருந்தொற்று காலத்து காதல் கதைகளை பற்றி பேசுவன என்றாலும்,

பெருந்தொற்று காலத்துக்கு முன்பே நடைபெற்ற சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் பல பத்தாண்டு

கடந்தும் நிலைத்திருக்கின்றன.

பெ.மு.வின் நாவல் காலத்திற்கேற்ற நவீனத்தை கொண்டே இருக்கிறது, மேகாசுவுக்கும்

முருகாசுவுக்கும் இடையில் நிகழும் சிறு சிறு நெருக்கங்கள் பால் புதுமை உறவை (மேகாசு

பாத்திரம் ஒரு Bisexualஆக இருக்க கூடும்) அருப்புதமாக வெளிப்படுத்துகிறது. சின்ன சின்ன

உரசல்கள், நெருக்கம், அழகிய தருணம் என்று இவ்விரு பாத்திரங்களுக்கு இடையில் நிகழும்

நட்பு தாண்டிய உறவை ஒரு தமிழ் நாவலில் படிப்பது இதுவே முதல் முறை என்பேன்.

Gabuவின் நாவல் அளவுக்கு காமம் பெ.மு வின் நாவலில் இல்லை என்றாலும் குறிப்பால்

உணர்த்தும் சில உவமைகள் கிளர்ச்சியூட்டின.

அசுரலோகத்தில் நடைபெறும் கதை என்று சொல்லிவிட்ட காரணத்தால் பெயர்கள் எல்லாமும்

அசுரலோக பெயர்களாகவே இருக்கிறது. ஒரு புது உலகத்தை நம் முன் காட்சி

படுத்திக்கொள்ள முடிகிறது. புது வசை சொல், புது குல பெயர், புது ஊர் பெயர்கள் ஆனால்

அங்கேயும் அதே பழைய சாதிய விழுமியங்கள் தான். பெ.மு வின் பிற நாவல்களில் இருக்கும்

நில அமைப்பு நெடுநேரம் நாவலிலும் வருகிறது. அங்கு செய்யப்படும் பயிர்களை வைத்தும்

நிலவியல் அமைப்பை வைத்தும் இடத்தை அறிந்து கொள்ள முடிகிறது. சில இடங்களில்

‘பூக்குழி’யின் சாயலை உணர முடிந்தது. இரண்டு நாவல்களுக்கும் சாதி-காதல் போன்ற

பொதுத் தன்மைகள் இப்படியான உணர்வை ஏற்படுத்தி இருக்கலாம்.

Gabuவின் நாவல் ஆறு, கடல், ஈரப்பதம், ஆலிவ் மரங்கள், கப்பல் பயணம் என புறம் சார்ந்த

அம்சங்களை பேசும் அதே குதுகலத்துடன் காதல், காமம், மானுட உறவுகள், ஏக்கம்,

வெறுமை, இருப்பு, பற்று போன்ற அகம் சார்ந்த உணர்வுகளை ஆழமாக பேசுகிறது.

ஈடித் கிராஸ்மன் இந்நூலை மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற சுவடே தெரியா வண்ணம்

மொழிபெயர்த்துள்ளார். Gabuவால் ‘நீங்கள்தான் என்னுடைய ஆங்கிலக் குரல்’ என்று ஈடித்

கிராஸ்மன் அறிவிக்கப்பட்டதற்கான காரணங்களை இந்நூலை படிப்பவர் உணர முடியும்.

அத்தனை நேர்த்தியான மொழியாக்கம். நூல் முழுக்க பல வாக்கியங்களை அடிக்கோடிட்டு

படிக்க முடிந்தது. ஆங்கிலத்தில் அமைந்தது போலவே இந்நூலுக்கு ஒரு தமிழ் மொழியாக்கம்

அமைந்தால் மகிழ்வேன்.

Love in the times of Choleraவும் சரி ‘நெடுநேரம்’ நாவலும் சரி அதன் விவரிப்புகளில்

ஒன்றுக்கொன்று கொஞ்சமும் சளைத்தவையல்ல. Gabu நாவலில் காமம் அதிகம், Florentino

Ariza தனக்கு கிடைக்காத பெண்ணை தான் சந்திக்கும் எல்லாரிடத்திலும் தேடி கொண்டே

இருக்கிறான். Fermina Daza விடம் கிடைத்த நேசம் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை,

அரைநூற்றாண்டு கடந்து கிடைத்திருந்தாலும் முதல் முறை காதல் கொண்ட பெண்ணிடம்

மட்டுமே Ariza எதிர்பார்த்த நேசம் கிடைத்தது. கடைசி வரி வரைக்கும் அந்த அரை

நூற்றாண்டு கால ஏக்கத்தை விவரிக்கும் சொல்லை Gabu தேடி கொண்டிருந்திருப்பர் என்றே

நினைக்கிறேன். காதலர்களான Fermina Dazaவும் Florentino Arizaவும் பயணம் செய்யும்

படகின் தலைவர் Diego Samaritano ‘எவ்வளவு காலம் இப்படியே படகில் பயணம் செய்ய

நினைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார். அதற்கு Florentino Ariza சொல்லும் பதில்

‘Forever’. வாசகரின் ஏக்கமும் இந்த வார்த்தையுடன் சேர்ந்தே முடிவுக்கு வருகிறது. Gabuவின்

ஆகச் சிறந்த கதை சொல்லும் திறன் இதில் வெளிப்படுகிறது.

பெ.மு.வின் ‘நெடுநேரம்’ நாவலில் இது போன்ற கவித்துவ முடிவு இல்லை என்றாலும்

படிப்பவரின் யூகத்திற்கே முடிவை விட்டு விடுகிறார். Binge செயலியில் தொடராக

வெளிவராமல் தனி நாவலாக வெளியாகி இருந்தால் முடிவு வேறு வகையில் இருந்திருக்கும்

என்றே தோன்றுகிறது. மதுரன்-மங்கசுரி ஆகியோருக்கிடையே காணப்பட்ட நிறைவேறா

காதல் 30 ஆண்டுகள் கடந்தும் நிறைவேறும் சாத்தியத்தை கொண்டிருப்பதாகவே நாவலின்

முடிவு அமைக்க பட்டிருக்கிறது. ‘நெடுநேரம்’ என்ற தலைப்பு ஏக்கத்தின் கால அளவை

குறிப்பால் உணர்த்துகிறது. குடும்பம், கணவன், குழந்தைகள் என்று தன் மீது திணிக்கப்பட்ட

பாசம் கலந்த அதிகார கட்டமைப்புகள் அர்த்தமற்று போகையில் மங்கசுரியின் மனதின்

ஆழத்தில் புதைந்து கிடந்த ஏக்கம் உயிர்த்தெழுகிறது. கொரோனா போன்ற பெருந்தொற்று

ஏற்படுத்தும் பொது முடக்கம் என்ற புற சூழலும் மங்கசுரியின் ‘தொலைந்து போகும்’

முடிவுக்கு காரணமாக இருக்கலாம்.

இரண்டு நாவல்களிலும் ஒவ்வொரு அத்தியாயங்களின் முடிவும், அடுத்த அத்தியாயத்தின்

முதல் சில பக்கங்களையாவது படிக்கத் தூண்டுபவை. சரளமான வாசிப்பனுபவத்தை

அளிப்பவை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் Love in the times of Cholera நூலின் முதல்

அத்தியாயத்தை இரவுவரை படித்துவிட்டு அது ஏற்படுத்திய ஆர்வத்தில் அன்றிரவே

அடையாறு ஒடிஸ்ஸி புத்தக நிலையம் சென்று அந்நூலை வாங்கியது நாவலை

முடிக்கும்போது திருப்தியான அனுபவமாக பட்டது. ‘நெடுநேரம்’ நாவலை Binge செயலியில்

படிக்காமல் ஒரு புத்தகமாகப் படிப்பதும் நல்ல அனுபவம்தான்.

பெ.மு.வின் புத்தகங்களுக்கு சர்வதேச அளவில் கிடைக்கும் வெளிச்சத்திற்கு அவரது கதை

சொல்லும் தன்மை முக்கிய காரணம், Márquez-ன் விவரிப்புகளுக்கு சற்றும் குறைவில்லாதது

பெ.மு.வின் விவரிப்புகள் என்பதை இவ்விரு நூலகளையும் ஒரு சமயத்தில் படிப்பவர்களால்

உணர முடியும்.

இம்மாத காலச்சுவடு இதழில் நெடுநேரம் நூலுக்கு ஒரு அறிமுகம் வெளியாகி இருந்தது, தி

இந்து ஆங்கில நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை Magazineஇல் ஆங்கிலத்தில்

மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கும் ‘ஆளண்டாப் பட்சி’ நாவல் குறித்தும், பெருமாள்

முருகன் சிறுகதைத் தொகுதி குறித்தும் ஒரு கட்டுரையை ரம்யா கண்ணன் எழுதி இருந்தார்.

கடைசியாக ஒரு தமிழ் எழுத்தாளரின் எழுத்துக்கள் இத்தனை பரவலாக மொழியாக்கம் ஆனது

எப்போது என்று தெரியவில்லை. இந்நிலை தமிழ் எழுதுலகிற்கு அரிதானது.

ஆரோக்கியமானதும்கூட.

மார்க்கேஸின் நாவலும் பெருமாள்முருகனின் நாவலும் -

கௌதம் ராஜ் ((முகநூல் பதிவு)

10 Nov 2023

• பகிர்: