Your cart is empty.
சத்ரபதி சிவாஜி ரயில்முனை
சத்ரபதி சிவாஜி ரயில் முனை போரி பந்தரில் பிரிட்டீஷ் கட்டடக்கலைஞரான எஃப்.டபிள்யூ. ஸ்டீவன்ஸால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கட்டடக் கலைஞர்களால் 1878 &- 88 வருடங்களில் கட்டப்பட்டது. இந்தியா அப்போது பிரிட்டீஷாரால் ஆளப்பட்டு வந்ததால் அது விக்டோரியா ரயில்முனை என்று அழைக்கப்பட்டது. கடற்கரை நகரமான பம்பாய் (மும்பை அன்று அழைக்கப்பட்டது இவ்வாறுதான்) ஒரு பெரிய வணிக மையமாக உருவாகியிருந்ததால் அதற்குப் பிரம்மாண்டமான ரயில் முனை தேவை என்று கருதப்பட்டது. இந்திய, பிரித்தானிய கட்டடக்கலை அம்சங்களை ஒருங்கே கொண்டுள்ள இந்த ரயில்முனை கலைச் சின்னமாக மட்டுமல்லாமல் பரபரப்பான ரயில் நிலையமாகவும் திகழ்கிறது. அதன் ஒரு பகுதி இப்போது அருங்காட்சியகமாக உள்ளது.