Your cart is empty.
பெருமைக்குரிய கடிகாரம்
சாணக்யாவின் சொற்கள் மந்தகாசத் தொனியும் மந்திரப் பண்பும் கொண்டவை. கடலால் சூழப்பட்ட கண்டத் துணுக்குகளைப் போல அண்டப் பேரியக்கத்தின் நடுவே மனித உயிரியின் அற்பச் சலனங்களை இந்தச் சொற்களால் அவர் பதிவுசெய்கிறார். குற்றம், ஏழ்மை, நோய்மை ஆகியவற்றை இயல்புகளாகக் கொண்ட அந்தச் சலனம் பேரியக்கத்தின் கதியில் சிலவேளை தண்டிக்கப்படலாம்; சிலவேளை மன்னிக்கப்படலாம்.
ஆனால் பேரண்டத்தின் பெருங்கருணை ஒருபோதும் அந்த மீச்சிறு சலனத்தைத் தன் கதியிலிருந்து விலக்கிவைப்பதை சாணக்யாவின் புனைவுகள் ஒப்புக்கொள்வதில்லை.



















