Your cart is empty.


வன்னியாச்சி
ஈழத்துப் புனைகதைஞர்களில் ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக முக்கியமானவை. ‘சுமைகள்’, ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’, ‘தாகம், ‘வீதியெல்லாம் தோரணங்கள்’, ‘பச்சை வயல் கனவு’ … மேலும்
ஈழத்துப் புனைகதைஞர்களில் ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக முக்கியமானவை. ‘சுமைகள்’, ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’, ‘தாகம், ‘வீதியெல்லாம் தோரணங்கள்’, ‘பச்சை வயல் கனவு’ போன்ற கனதிமிக்க நாவல்கள்மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை இனம்காட்டியிருக்கும் இவர் ‘மழைக்கால இரவு’, ‘அழுவதற்கு நேரமில்லை’, ‘வன்னியாச்சி’ போன்ற சிறுகதைத் தொகுதிகளை ஏலவே அறுவடை செய்து சிறுகதைத்துறையிலும் அதிர்வை ஏற்படுத்தியவர். மெய்யனுபவங்களையும் பிறர் வாயிலாகக் கேட்டறிந்தவற்றையும் கலாரீதியாகக் கூறி வாசகரிடையே அவற்றினைத் தொற்றவைப்பதோடு தமிழ்ப்புனைகதை இலக்கியத்தில் முகிழ்விடும் நவீனச் செல்நெறிகள் பற்றிய பிரக்ஞைக்கு உட்பட்டு எழுதுவதும் தாமரைச்செல்வியின் வெற்றிக்கான காரணிகள் எனக் கொள்ளலாம். போர்க்காலச் சூழல், போரின் அவலச் சாவுகள். அழிவுகள். பதற்றம் நிறைந்த மனங்கள் ஆகியவற்றைத் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிப்பதில் தாமரைச்செல்வி தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். சக்தியற்ற பெண்களின் மௌன உணர்வுகளுக்கு வடிவங்கொடுப்பதில் வல்லமையானவர். இச்சிறுகதைத் தொகுதியும் இவரது திறனுக்குச் சாட்சி சொல்வதாகவே அமைந்திருக்கிறது. புலோலியூர் - ஆ. இரத்தினவேலோன்
ISBN : 9789386820150
SIZE : 13.9 X 17.0 X 21.5 cm
WEIGHT : 374.0 grams
Thamaraichelvi's contribution to the fifth generation of Eelam literature is an impressive one. Identified for her novels widely, her previous short story collections were also critically acclaimed. Passing over experiences personal and otherwise in an intimate way to the reader is the acheivement of Thamaraichelvi's fictions. Her works realisitically portray the wartime situations, tragical deaths, destruction of war and anxious minds. Her Fourth short story collection is equally successful as her previous works in voicing the silent feelings of women.