Your cart is empty.
அகவிழி திறந்து
பத்திரிகை, பதிப்பகம், லௌகீக வாழ்க்கையில் ஏற்பட்ட தன் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் கண்ணன் சுவையான மொழியில் பத்திகளை எழுதுகிறார். இத்தகைய பத்திகளின் தொகுப்பு ‘அகவிழி திறந்து’. … மேலும்
பத்திரிகை, பதிப்பகம், லௌகீக வாழ்க்கையில் ஏற்பட்ட தன் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் கண்ணன் சுவையான மொழியில் பத்திகளை எழுதுகிறார். இத்தகைய பத்திகளின் தொகுப்பு ‘அகவிழி திறந்து’. 2007 - 2010இல் காலச்சுவடு மாத இதழில் இதே தலைப்பில் வெளிவந்தவை இவை.
கூர்மையான அவதானிப்பு, உலகப் பார்வை, உண்மைத் தேட்டம், மொழி நவீனம், இலக்கிய அழகு ஆகியவற்றோடு சுவை மிகுந்த சொல் முறையும் அகவிழி திறப்பு முயற்சியில் கண்ணனுக்கு உதவுகின்றன.
மொழிஆளுகையில் சித்திரக்காரனின் லாவகம், இழையோடும் குறும்பு, மிகை அற்ற சொற்கள், ஆங்கில வாசனை வீசும் வாக்கிய அமைப்பு ஆகியவை கூடிவந்து, நவீன அல்புனைவு எழுத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது கண்ணனது எழுத்து.
ISBN : d9789380240503
SIZE : 13.9 X 0.1 X 21.5 cm
WEIGHT : 173.0 grams