Your cart is empty.
அறவி
-அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள்
பொருத்திப் பார்த்தால் துறவின் அர்த்தம் புதிதாய் விளங்கும். நிதர்சனங்களின்
முகங்களுக்குள் துறவுத்தன்மையைப் பொருத்திப் பார்க்க விழைகிறது இந்த
நாவல்.
… மேலும்-அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள்
பொருத்திப் பார்த்தால் துறவின் அர்த்தம் புதிதாய் விளங்கும். நிதர்சனங்களின்
முகங்களுக்குள் துறவுத்தன்மையைப் பொருத்திப் பார்க்க விழைகிறது இந்த
நாவல்.
கடந்த நூற்றாண்டில் பெண்கள்மீது திணிக்கப்பட்ட பாலியல் வறட்சி பல
பெண்களை இல்லறத்துள்ளும் துறவறம்
பேணும் நிலையை நோக்கி வலிந்து தள்ளியிருப்பதை மறுக்கவியலாது. அதைப்
பெண்ணின் தனிப்பட்ட விருப்பமாக மாற்றும் யதார்த்தங்களும் அரங்கேறின.
இன்றைய பெண்ணின் திண்ணம், சடங்குகளைத் தாண்டி வாழ்வியலை அதன்
நுட்பத்துடன் அணுக கற்றுத்தந்திருக்கிறது.
சென்ற நூற்றாண்டின் தொடக்கக் காலத்துப் பெண்ணையும் அதன் பிற்காலத்துப்
பெண்களையும் இந்த நூற்றாண்டின் பெண்களையும் பற்றி இந்தப் புதினம்
பேசுகிறது. அந்தந்தக் காலகட்டத்துப் பெண்களின் இணைத்தன்மையையும்
முரண்களையும் இப்புதினம் கையாள்கிறது. வெவ்வேறு நாடுகள், நகரங்கள்,
கலாச்சாரங்கள், கடிதங்கள் என்றவாறு செல்லும் இந்தக் கதை பெண்கள்
எவ்வாறு அவற்றின் பொருட்டு உருமாற்றம் பெறுகிறார்கள் என்பதையும்
உணர்த்த முயல்கிறது.
ISBN : 978-81-19034-33-8
SIZE : 14.0 X 1.2 X 21.5 cm
WEIGHT : 0.3 grams
சரோஜினி கனகசபை (வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழுமம்)
3 Feb 2024
சிறுவயதிலேயே பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளைக் கையாளும் குழந்தைகள்
மனரீதியாக அதிகம் பாதிப்படைகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான
அழுத்தத்தோடு பாதுகாப்பற்ற மனநிலையிலேயே வாழ்கிறார்கள்.
குழந்தைப் பருவத்தில் சொந்த மாமன் மூலம் பாலியல் வன்முறைக்குள்ளான தேவகிக்கு
உளவியல் ரீதியாக ஏற்பட்ட மனப் போராட்டங்கள் , மனச்சிக்கல்கள், மனப் பாதிப்புகள்
அனைத்தும் நூலில் வாசிக்கும் போது மனம் பதைக்கிறது.
வரலாறு எழுதப்பட்ட காலத்தில் இருந்தே பெண்ணுக்கும் ஆணுக்கும் தனித்தனி நியதிகள்,
இலக்கணங்கள். பெண்ணின் இலக்கணம் அல்லது கடமையாகச் சொல்லப்பட்டவை
எல்லாமே , அவற்றைத் தங்கள் அடையாளமாகவும் ,அழகுசேர்க்கும் அணிகலனாகவும் ,
பெண்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் அவற்றுக்குப் பண்பாட்டு முலாம் பூசப்பட்டு
திணிக்கப்படுகிறது.
சில சமயங்களில் வாழ்க்கையில் தான் எதிர்கொள்ளும் இன்னல்களை கடப்பதற்கு,
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு, ஆலோசனை–ஆறுதல் பெறுவதற்கு , உடல்ரீதியான,
மனோரீதியான, அந்தரங்கமான பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு
தேவைப்படுகிறது. ‘என்ன வந்தாலும் நாம் சமாளிக்கலாம். எதற்கும் நீ கவலைப்படாதே!’
என்று சொல்ல ஒரு தோழி, எல்லா பெண்களுக்குமே அவசியம். அத்தகைய தோழியாக
வசுமதி தேவகிக்கு இருக்கிறாள்.
கடிதத் தொடர்புகளின் வழியே மட்டும் தங்கள் நட்பை இறுதி வரைக்கும் காப்பாற்றிக்
கொண்டிருக்கும் தேவகி, வசுமதியின் தோழமையான கடித பகிர்வுகளின் வழியே சென்ற
நூற்றண்டின் பின்னால் வந்த ஒரு தலைமுறை பெண்களின் உலகம் இங்கு நூலாசிரியர் மூலம்
நாம் அறிய முடிகிறது. அவர்களது பால்ய கால நிகழ்வுகளையும், இழந்து போன அவர்களது
இளமைக்கால சந்தோசங்களையும், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் எதிர்கொண்ட குடும்பம்
சார்ந்த பிரச்சினைகளையும், வாழ்வின் கசப்பான தருணங்களையும் பல்வேறு நிகழ்வுகளின்
மூலம் ஆசிரியர் நூலில் விவரித்துள்ளார்.
மனநிலை சரியில்லாத வரதனுக்கு தேவகியை கட்டிவைக்கும் செல்லம்மா ஆச்சியின்
பிரயத்தனங்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேவகியின் தோழி வசுமதியின் கோபமும்
நாவலில் எனக்கு பிடித்த பகுதிகளாக உள்ளது.
அவர்களது சமூக பின்புலத்தில் அவர்கள் மீது திணிக்கப்பட்ட திருமண உறவுமுறைகள்,
சடங்குகள், வாழ்வியல் எதார்த்தம் தந்த நெருக்கடிகள் அனைத்தும் மனம் கசிய வைக்கிறது.
சாதி, இனம், பாரம்பரியம், சொத்து, பெருமை, சமூக அந்தஸ்து போன்ற பல்வேறுபட்ட
பழமை கருத்தாக்கங்களிலும், மூட பழக்கவழக்கங்களிலும் பெண்களின் இயல்பு வாழ்க்கை
தொலைந்துபோன ஒன்றாகவும், தங்களது கனவுகள், விருப்பங்கள் யாவற்றையும் இழந்து
போனவர்களாகவும், தங்களது தனித்துவம் இன்னதென்று அறியாதவர்களாகவும்
ஆகிவிட்டதை இந்த நாவலின் பல முக்கிய நிகழ்வுகளின் வழியாக அறியத் தருகிறார்
நாவலாசிரியர்.
பெண்கள் அவர்களது திருமணத்திற்கு பிறகு அவர்கள் குடும்பம், குழந்தை வளர்ப்பு, வீட்டு
வேலைகள் என்று தங்கள் இல்லம் தாண்டி எங்கும் செல்லாமல் வெளியுலகம் அறியாமல்
உழலும்போது தங்களை அறியாமலேயே தங்கள் உடல்நலம் பேணுவதை மறந்து
போய்விடுவதும் இயல்பான ஒன்றாக ஆகிவிட்டதை நாவலில் சில இடங்களில் குறிப்பிட்டு
சொல்கிறார்.
புதிய தலைமுறை தேவகியின் மகள் யமுனாவாகவும் , வசுமதியின் மகன் சரவணனாகவும்
இந்த நாவலில் அறியப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு என்று தனித்த பார்வையுடன்
முன்னோக்கி நகர்பவர்களாகவும், அதே சமயம் தங்களுக்கு தாயாய் வாய்த்த தேவகி, வசுமதி
என்ற பெண்களின் முந்தைய நிலையிலிருந்து அவர்களை மீட்க போராடுபவர்களாகவும்
இருப்பது சென்ற தலைமுறை பெண்களின் வாழ்வியலை புரிந்து கொண்ட புதிய
தலைமுறையை நினைத்து பெருமை அடைய செய்கிறது.
யமுனாவின் திருமண முறிவு குறித்துக் கவலையுற்று அவளுடைய தாய், “யம்மு நான் வாழ்ந்த
இந்த அறவி வாழ்வை நீயும் முன்னெடுத்துவிடாதே. அது ஒரு கொடுங்காலம் பெண்ணுக்கு”
என்ற போது, “அம்மா இப்போது பெண்களின் உலகம் மாறிவிட்டது. ஒவ்வொருவரும் எங்கள்
தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் பொறுப்புகள் தாண்டி தனிமனிதர்களாக வாழக்
கற்றுவருகிறோம் என்று கூறுகிறாள்”. உண்மை தானே! . அவ்வாறு தனித்துவமாக யோசிக்க
கூடிய புதிய சிந்தனையை யமுனாவிற்கு அவள் கற்ற கல்வியும் , அவளுடைய பொருளாதார
சுதந்திரமும் அவளுக்கு அளித்திருக்கிறது அல்லவா.
இச்சமுதாயம் பெண்ணைச் சுற்றி வரைந்திருக்கும் கோட்டை ஒரே நாளில் தாண்டி விடவோ,
அழித்துக்கொண்டு வெளியேறிவிடவோ இயலாது. அப்படி செய்தால் அதற்கு பின்னால்
வருத்தங்கள்தான் எஞ்சி நிற்கும்.
ஒவ்வொரு நாளும் தன் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே வர வேண்டும். குறிக்கோளை
அடைய சீரிய சிந்தனையும், திடமான தைரியமும், நேர்மறையான திட்டமிடலும்
இருந்தால்தான் நம் குறிக்கோளை நாம் அடைய இயலும்.
21ஆம் நூற்றாண்டுப் பெண்களுக்கு தனக்கு என்ன வேண்டும் என்கின்ற தெளிவு இருக்கிறது.
உறவுகள் குறித்தும், திருமணம் குறித்தும் அவர்களிடையே புரிதல் இருக்கிறது. பெண் எப்படி
எல்லாம் தன்னையும் தன்னைக் கொண்டு பிறரையும் மீட்டெடுக்கிறாள் என்பதை
புரிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது.
அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள் பொருத்திப் பார்த்தால்
துறவின் அர்த்தம் புதிதாய் விளங்கும். நிதர்சனங்களின் முகங்களுக்குள் துறவுத்தன்மையைப்
பொருத்திப் பார்க்க விழைகிறது இந்த நாவல்.
கடந்த நூற்றாண்டில் பெண்கள்மீது திணிக்கப்பட்ட பாலியல் வறட்சி பல பெண்களை
இல்லறத்துள்ளும் துறவறம் பேணும் நிலையை நோக்கி வலிந்து தள்ளியிருப்பதை
மறுக்கவியலாது. அதைப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பமாக மாற்றும் யதார்த்தங்களும்
அரங்கேறின. இன்றைய பெண்ணின் திண்ணம், சடங்குகளைத் தாண்டி வாழ்வியலை அதன்
நுட்பத்துடன் அணுக கற்றுத்தந்திருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்கக் காலத்துப்
பெண்ணையும் அதன் பிற்காலத்துப் பெண்களையும் இந்த நூற்றாண்டின் பெண்களையும்
பற்றி இந்தப் புதினம் பேசுகிறது. அந்தந்தக் காலகட்டத்துப் பெண்களின்
இணைத்தன்மையையும் முரண்களையும் இப்புதினம் கையாள்கிறது. வெவ்வேறு நாடுகள்,
நகரங்கள், கலாச்சாரங்கள், கடிதங்கள் என்றவாறு செல்லும் இந்தக் கதை பெண்கள் எவ்வாறு
அவற்றின் பொருட்டு உருமாற்றம் பெறுகிறார்கள் என்பதையும் உணர்த்த முயல்கிறது.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
வாழ்வின் தாள முடியா மென்மை
-செக்கோஸ்லோவேகிய பிரெஞ்சு நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான வாழ்வி மேலும்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. மேலும்