Your cart is empty.
-பகடி, எளிமை இரண்டும் இசை கவிதைகளின் பொதுவான அடையாளங்களாகச் சொல்லப்படுபவை. பகடி அவரது பல கவிதைகளில் வாசகர்களுடன் தொடர்புறுத்தச் செயல்படும் ஓர் உத்தி மட்டுமே. எளிமையும் சமயத்தில் ஒரு தோற்ற மயக்கம்தான். சட்டெனத் திறக்க ஓரடி தொலைவில் வாட்டமாகத் தோன்றும் ஒரு சிறிய கதவு. திறந்தாலோ, கண்ணுக்கு அகப்படும் காட்சி, அது சற்றுக் கோணலாகி இன்னொரு காட்சி, சில சமயம் புலப்படாது புலப்படும் பின்னொரு காட்சி என விரிந்து செல்கின்றன. இசையின் கவிதைகளில் பொதுவாகவே தருணங்கள் அபார சக்தி படைத்தவையாக இருக்கின்றன. கவிதைக்குள் அப்போது நிகழ்பவையாகவும் ஆழ்ந்து அனுபவிக்கப்படுபவையாகவும் கொண்டாடப்படுபவையாகவும் நீண்டு வளர்பவையாகவும் இருக்கின்றன. பொருந்தாதவற்றைப் பொருத்திவைக்கின்றன. மட்டுமின்றி, ஒருவர் இன்னொருவராக மாறிவிடும் ஆசியையும் சாத்தியப்படுத்திவிடுகின்றன. சில கவிதைகள் மொத்த வாழ்க்கையையுமே ஒரு நுண்தருணத்தின் ஊசிமுனையில் சீராக நிறுத்துகின்றன.
ISBN : 9788119034123
SIZE : 14.0 X 3.0 X 21.0 cm
WEIGHT : 455.0 grams
இறைவி புக்ஸ்
1 Apr 2026
’இசை கவிதைகள்‘ வாசிப்பு
”காற்று வாங்கியபடி
தண்டவாளத்தின் ஓரமாய்
நடந்துகொண்டிருந்தவனை
ஒரு குறுஞ்செய்தி வந்தடைந்தது.
பிறகு தண்டவாளத்தில் இறங்கி நடந்தான்”
நன்றி: இறைவி புக்ஸ் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க:
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அழகில் கொதிக்கும் அழல் (இ-புத்தகம்)
-பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் மேலும்
ஆட்டுதி அமுதே (இ-புத்தகம்)
-கவிதையின் முதன்மையான இயல்புகளில் ஒன்று அது என்றும் நிகழ்காலத்தை ஒட்டியே இயங்குகிறது என்பது. நவீன மேலும்














