Your cart is empty.


பிராப்ளம்ஸ்கி விடுதி
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டது இந்நாவல். அகதிகள் புகலிட தேசத்தில் உயிர்த் … மேலும்
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டது இந்நாவல். அகதிகள் புகலிட தேசத்தில் உயிர்த் தரித்திருப்பதற்கான விழைவை மட்டுமே கொண்டவர்கள் என்று பொதுப்புத்தியில் படிந்துபோயிருக்கும் சித்திரத்தை உடைக்கிறது இப்படைப்பு. சூழலால் ஏற்படும் புறநெருக்கடி அவர்களது இயல்பான உணர்வுகளையும் தனித்த குணாம்சங்களையும் விருப்பங்களையும் நம்பிக்கைகளையும் வேரறுத்து விடுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு வகையானது என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. அகதிகளின் வாழ்க்கையைப் பெரும்பாலும் கழிவிரக்கத்திற்குரியதாகவே சித்தரிக்கும் மற்ற படைப்புகளிலிருந்து மாறுபட்டு இந்நாவல் எள்ளலும் உற்சாகமுமாக உயிர்த் துடிப்புடன் நகர்கிறது. நாவலாசிரியர் தனது பகடிநடையினூடே புகலிட வாழ்வின் நிச்சயமின்மையின் அவலத்தை நுட்பமாகக் கூறியிருப்பது வாசகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்குகிறது. நாவல் என்ற வகைமையில் மட்டுமல்ல, படைப்பு என்ற நிலையிலும் ‘பிராப்ளம்ஸ்கி விடுதி' முற்றிலும் ஒரு புதிய முயற்சி.
ISBN : 9789355230515
SIZE : 15.2 X 0.7 X 23.0 cm
WEIGHT : 0.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பருவநிலை மாற்றம்
-சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி,
கல்லூரி மாணவர்களும மேலும்
வெட்டுக்கிளிப் பெண்
-பிலிப்பைன்ஸ் - ஆஸ்திரேலிய எழுத்தாளர் மெர்லிண்டா பாபிஸ் எழுதியிருக்கும்
‘வெட்டுக்கிளிப் ப மேலும்
அபராஜிதன்
-இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு
வந்திருக்கவில்லை. போர் உச்சம் மேலும்
மகாபாரதம்
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப்
பிரிவுகள், தத்துவப் பார் மேலும்
அறவி
-அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள்
பொருத்திப் பார்த்தால் துறவின மேலும்
நள்ளிரவும் பகல் வெளிச்சமும்
-மனித உறவுகள் மீது சமூகத்தின் விதிகள் எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன
என்பதை ‘நள்ளிரவும் பகல் வெ மேலும்