Your cart is empty.
தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்
எழுத்தாளரும் இதழியலாளருமான அரவிந்தன் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இவை. நுட்பமான ரசனையும் தீர்க்கமான பார்வையும் கொண்டு படைப்புகளை அணுகும் இக்கட்டுரைகள், வெளிவந்த சமயங்களில் பரவலான கவனம் பெற்றுக் கூர்மையான விவாதங்களை எழுப்பியவை. ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோரின் மொத்தச் சிறுகதைகள், க.நா.சு., கரிச்சான் குஞ்சு, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் ஆகியோரின் நாவல்கள் எனப் பல எழுத்தாளர்களின் படைப்புகளை அலசும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சமகால எழுத்தாளர்களின் ஆக்கங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தும் விமர்சனங்கள் அருகிவரும் இன்றைய சூழலில் அரவிந்தனின் கட்டுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.











