Your cart is empty.
மு. இராமனாதன்
பிறப்பு: 1959
பொறியாளர் - ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளராகவும் பிரிட்டனின் சார்டர்ட் பொறியாளராகவும் பட்டம் பெற்றவர். இந்தியா, ஹாங்காங், சவுதி அரேபியா முதலான நாடுகளில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களில் பணியாற்றியிருக்கிறார். இவரது பொறியியல் கட்டுரைகள் பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளியாகியுள்ளன.
எழுத்தாளர் - உலக அரசியல், சமூகம், பண்பாடு, மதம், கலை-இலக்கியம், பொறியியல் முதலான பொருள்களில் எழுதிவருகிறார். இவரது பதிப்பில் மூன்று நூல்கள் வெளியாகியுள்ளன. ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய 25 கூட்டங்களின் பதிவுகள் அடங்கிய ‘இலக்கிய வெள்ளி’ (2008); பர்மாவிலிருந்து புலம்பெயர்ந்த செ. முஹம்மது யூனூஸின் அனுபவத் தொகுப்பான ‘எனது பர்மா குறிப்புகள்’ (காலச்சுவடு, 2009); அ. முத்துலிங்கத்தின் கிளாசிக் சிறுகதைகளின் தொகை நூலான ‘புவியீர்ப்புக் கட்டணம்’ (காலச்சுவடு, 2022).
சொந்த ஊர்: சிவகங்கை மாவட்டம், அரியக்குடி.
பெற்றோர்: முத்துக்கருப்பன் - அழகம்மை.
மனைவி: அலமேலு.
மகள்: கவிதா, வழக்குரைஞர்.
மகன்: குமார், ஆய்வு மாணவர்.
மின்னஞ்சல்: mu.ramanathan@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இது முத்துலிங்கத்தின் நேரம்
-ஓர் எழுத்தாளரை ஒரு வாசகர் இந்த அளவுக்கு நெருக்கமாகப் பின்தொடர
முடியுமா? அவரது எல்லாப் பட மேலும்