சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ நாவலுக்கான மதிப்புரை
…அன்றைய காலகட்ட பிராமண குடும்பங்களில் பெண்மக்களில் விதிவிலக்குகளில் வரக்கூடிய ஒரு பெண்தான் இதில் வரும் அம்பிகா என்னும் பாத்திரம். தான் விரும்பிய வாழ்க்கையின் பொருட்டு வீட்டை விட்டு அந்தப் பெண் மிகவும் அனாயாசமாக வெளியேறும் தருணத்தில் அதிர்வுகளுக்கு உள்ளாவது அந்த குடும்பமும் அதை ஒட்டிய அக்ரஹாரமும் மட்டுமல்ல; அம்பிகாவைப் பின் தொடரும் நாமும்தான்.
…சுரேஷ்குமார இந்திரஜித் ஆகிவந்த எழுத்தாளர் என்பதால் நாவலில் கையாண்டிருக்கும் நுணுக்கமான விஷயங்கள் குறித்து புதிதாக நாம் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என நினைக்கிறேன்.
…இந்த நாவல் மூலம் ஆசிரியர் வாசகர்களுக்கு செழுமையான ஒரு சாளரத்தை 'இந்தாருங்கள், பாருங்கள்' என்று திறந்து வைத்திருக்கிறார். இந்த சாளரம் அவரிடம் மேலும் வேறு வேறு சாளரங்கள் இருக்கக்கூடுமா என்று தேட வைக்கக்கூடியதாக இந்தப் படைப்பு உள்ளது…
நன்றி: கோபாலகிருஷ்ணன் (முகநூல் பதிவு)