…தி. ஜாவின் சிறப்பாய் நான் ரசிக்கும் சிலவற்றின் ஆரம்பப் புள்ளியை இதில் காண முடிகின்றது. உதாரணம்- அவர் கதைகளின் அங்கமாய் வரும் இசை, அகம் சார்ந்த கேள்விகள், கத்தாமல் பதிய வைக்கும் பெண்ணியம் போன்றவை.
…கதையின் நடை, நேரியல்பற்ற முறையில் கதை நகர்ந்த விதம், கையாண்ட இலக்கிய யுக்திகள், உவமைகளெல்லாம் என்போன்ற தி.ஜா ரசிகனுக்கு பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
நாவலின் காலம், மற்றும் தி.ஜாவின் முதல் நாவல் முயற்சி என்பதை மனத்தில் கொண்டு படித்தால் அனைவருமே ரசிக்கலாம்.