நீல.பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலைப் பற்றி…
…அனந்த நாயரின் வாழ்க்கையில் நாற்பத்தெட்டு மணி நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளும், அவற்றினூடே அவருக்கு நெருக்கமானவர்களை நினைவுகூர்ந்து நனவோடை உத்தியில் அவர்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதுதான் பள்ளிகொண்டபுரம் நாவல்.
…நாவலின் மையக் கருத்தாக இதில் வரும் பெண்களான அனந்தநாயரின் தாய், அக்கா கல்யாணி, அவருடைய அப்பாவின் தங்கை குஞ்ஞலட்சுமி, அவருடைய மனைவி கார்த்தியாயினி, அவரது மாமனார் சேர்த்துக் கொண்ட ஜகதம்மாள், அவருடைய மகள் மாதவிக்குட்டி ஆகியோர் ஒழுக்கம் மற்றும் அதைச் சார்ந்த அவர்களுடைய நிலைப்பாடுகளைப் பற்றிய கேள்விகள் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கிறார்.
…எழுத்தாளர் நீல. பத்மநாபன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அதனால் தானோ என்னவோ வாசிக்க கொஞ்சம் கடினமானதாக இருந்த வட்டார வழக்கு நடையையும் நாவல் வாசிப்பை தடுத்து நிறுத்தவில்லை.
இந்த நாவல் ஒரு புதுவிதமான சுவை.
நன்றி - இரா. மதிஒளி (முகநூல் பதிவு)