…இலங்கைத் தமிழ்ப் படைப்புகள் என்ற பொதுத்தலைப்பின் கீழ் போருக்கு முந்திய இலக்கியம், போருக்குப் பிந்திய இலக்கியம், போர்ச்சூழல் சார்ந்த படைப்புகள், இன்றைய காலகட்டத்தின் பதிவுகள், புலம்பெயர் படைப்புகள் என்று பல வகைமைகள் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் உண்டு. புலம்பெயர் படைப்புகளில் அகதிகளாகக் குடியேறுவது, குடியேறியவர்களின் சுய அனுபவக் கதைகள் ஒரு தனி வகையைச் சார்ந்தவை. இத்தொகுப்பில் உள்ள சாந்தினியின் கதைகள் அவ்வகையைச் சேர்ந்தவை…
…சொந்த வாழ்க்கை அனுபவங்களும் தன் இனத்தின் அவலங்களும் இழப்புகளும் செய்திப் பதிவுகளாக இல்லாமல் இலக்கியமாக்கப்படும்போது அவை மனித மொத்தத்தின் துயரமாக, அவலமாக மாறிவிடுகிறது. அப்போது எழுத்தாளர் உலகத்தின் பொதுக் குரலாகிவிடுகிறார். அப்போது தனிப்பட்டதும் தனிமையின் சாட்சியாக அல்ல மனித வாழ்வின் மொத்தக் கதையாகிறது...