“மனநல விடுதியை மையமாகக் கொண்ட நாவலென்றபோதும் இதுவொரு அரசியல் நாவலும்கூட. இதில் காட்டப்பட்டுள்ள மனநல விடுதி என்பது ஒட்டுமொத்த துருக்கிதான் என்ற அரசியல் பார்வைக்கும் இடம் உள்ளது. … …
… கதைக்களம், கதாபாத்திரங்கள், மொழி என யாவுமே சவாலானதாய் அமைந்துள்ள இந்த நாவல் தமிழில் வெகு இயல்பாக வாசிக்கும்படியாக நேர்த்தியாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
… அளவில் பெரிய நாவலென்றாலும் கதை அமைப்பு, விதவிதமான விநோதமான கதாபாத்திரங்கள், மொழியாக்கத்தின் நேர்த்தி ஆகியவற்றின் காரணமாக இந்த வரலாற்று அறிக்கையை ஊன்றி வாசிக்க முடியும்.”