Your cart is empty.
2 Jul 2025
ராமச்சந்திர குஹா எழுதிய ஏழு போராளிகள் (தமிழில்: சு. தியோடர் பாஸ்கரன்) பற்றிய பார்வை
ஆங்கிலேயர்கள் நம்மை அடக்கி ஆண்டவர்கள் எனும் பதம் நம் பள்ளிப்பாடதிட்டத்தால் உருவேற்றப்படுகிறது. இதற்கு எதிர்முனையில் இந்தியாவிற்காக உழைத்த வெளிநாட்டவர்களும் உள்ளனர் என்பது நமக்கு மாற்று வரலாறாகிறது. அவ்வகையான நூலை இந்தியாவின் சமகால, முக்கியமான வரலாற்றாசிரியரான ராமச்சந்திர குஹா எழுதியிருக்கிறார். எழுத்தாளர் சு.தியோடர் பாஸ்கரனின் சிறப்பான மொழிபெயர்ப்பில் “ஏழு போராளிகள்” எனும் தலைப்பில் வாசிக்கக் கிடைக்கிறது.
வரலாறு வெற்றிகளால் தீர்மானிக்கப்படுகிறது எனும் கூற்றை அவமதிக்கிறது இந்த நூல். வரலாறு சமூக மாற்றங்களால் எழுதப்படுவது. மேம்படும் பண்பாடும், சமூகமும் வரலாறின் அங்கமாகிறது. அதற்கு காரணமாக அமையும் ஏழு பேரின் வாழ்க்கை இந்த நூலில் பேசப்படுகிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/1CgUWtxa17/?mibextid=wwXIfr