Your cart is empty.
சுகிர்தராணி கவிதைகள் (1996 - 2016)
-
புயேனோசைரிஸ் (அர்ஜெண்டினா) விமானதளத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள இக்கதை, விமானப் போக்குவர மேலும்
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான மேலும்
தமிழகத்தில் அடிமைமுறை பற்றிய நூல்கள் மிகக் குறைவு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘தமிழகத்தில் அடி மேலும்
இத்தொகுப்பு மூன்று குறுநாவல்களையும் குறுநாவல் (வகைமையின்) சாயல்கொண்ட மூன்று நெடுங்கதைகளையும் உள்ள மேலும்
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய மேலும்
வலிமையான சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆன்ம பலத்தை வழங்குகின்றன வண்ணநிலவனின் கதைகள். நம்மைச் சோதிக்க மேலும்
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக் மேலும்
புயேனோசைரிஸ் (அர்ஜெண்டினா) விமானதளத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள இக்கதை, விமானப் போக்குவரத்தின் தொடக்கக் காலத்தோடு தொடர்புடையது. அக்காலகட்டத்தில் பெரும்பாலும் தபால் போக்குவரத்துக்காகவே விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பகல்நேர விமானப்பயணம் பிரச்சினையின்றி இயங்கத் தொடங்கிவிட்டது. மாறாக, இரவுநேர விமானப்பயணம் ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. அப்படிப்பட்ட விமானப் பயணத்தைத் தொடர வேண்டுமா என்னும் கேள்வி எழுகிறது. பெரும்பாலானோர் இரவுநேர விமானப்பயணத்தை நிறுத்திவிட வேண்டுமென்றே கருதினர்; அதற்கான அழுத்தமும் கொடுத்தனர். ஆனால் விமான சேவையின் பொறுப்பாளரான ரிவியேர், அதனைத் தொடர வேண்டும் என்னும் முடிவில் உறுதியாக இருக்கிறார். இச்சூழலில், அன்றிரவு இயக்கப்பட்ட மூன்று விமானங்களில் ஒன்று விபத்துக்குள்ளாகிறது; எங்கோ விழுந்து நொறுங்கிவிடுகிறது. வீரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அதன் விமானி பரிதாபமாக உயிரிழக்கிறான்.
இப்போது என்ன செய்யப்போகிறார் ரிவியேர் என்ற கேள்விக்குப் பதிலாக அமைகிறது இந்த நாவல்.
விமானிகளின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும் தொடக்ககால நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் இந்நாவலில், ‘வினையாற்றுதல்’ குறித்த விவாதங்களும் விழுமியங்களும் முன்னிலைப்படுகின்றன. அதுவே இந்நாவலின் சிறப்பாகும்.
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது. கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப்பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும்செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம். இத்திட்டம் எவ்வாறு உருவானது, எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது, இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒலித்த குரல்கள் எவை, பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் எவ்வாறு இத்திட்டம் கைவிடப்பட்டது என்பதை எல்லாம் ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில், விறுவிறுப்பான நடையில் இந்நூல் ஆராய்கிறது. குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான கிளர்ச்சியின் பின்புலத்தை விளக்கிப் பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி விரிவான முன்னுரை எழுதியிருக்கிறார். நவீன தமிழகத்தின் சமூக-அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்ள விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
தமிழகத்தில் அடிமைமுறை பற்றிய நூல்கள் மிகக் குறைவு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘தமிழகத்தில் அடிமைமுறை’ நூல் குறிப்பிடத்தகுந்தது. அந்த வரிசையில் வருவது அ.கா. பெருமாளின் இந்த நூல். இதில் இருப்பவை அடிமைமுறை தொடர்பான மூல ஆவணங்கள். நாட்டார் வழக்காறுகளின் வழியும் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசிவரும் அ.கா. பெருமாள், இந்த நூலில் அதைப் பெருமளவில் பாவித்திருக்கிறார். இந்நூலின் முன்னுரை அரிய பல செய்திகளைக் கூறுவது. தென்குமரியில் உள்ள சில சாதிகளைப் பற்றிய அரிய செய்திகளைக் கதைப்பாடல்கள் வழி மீட்டெடுத்திருக்கிறார் பெருமாள். கடின உழைப்பு நூலில் தெரிகிறது.
இத்தொகுப்பு மூன்று குறுநாவல்களையும் குறுநாவல் (வகைமையின்) சாயல்கொண்ட மூன்று நெடுங்கதைகளையும் உள்ளடக்கியது. தொகுப்பில் உருப்பெறும் மையக் கதாபாத்திரங்கள் பொ. கருணாகரமூர்த்தியின் மென்மையும் அங்கதமுமான எழுத்தில் தனித்தன்மை கொண்டோராகின்றனர். அவர்கள் தோற்றத்திலும் குணநலன்களிலும் மாறுபட்டவர்கள். அரசியல் - சமூக ஒழுங்குகளிலிருந்து தனிமைப்பட்டும் முரண்பட்டும் விலகியவர்கள்.
காசி, ஜெனிபர், நீலக்கண்களைக் கொண்ட பாலசிங்கம் என்று கதைகளில் திரண்டு நிற்கும் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக்குவது இந்தத் தனித்தன்மையான குணநலன்களும் மாறுபாடுகளும்தான். வெகுஜனப் போக்குகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் ஒழுங்குகளுக்கும் அதிர்ச்சியை அளிக்கின்றவர்களாக எழுத்தில் அக்கதாபாத்திரங்கள் உருப்பெறுகின்றனர். வெவ்வேறு நிலப்பகுதிகளைக் கண்டடைந்து புனைவுமொழியில் அமரத்துவமான சாத்தியங்களை உருவாக்கிக் காண்பிக்கிறார் பொ. கருணாகரமூர்த்தி.
தனித்துவமான மனிதர்களின் வாழ்வில் அரசியல் பண்பாட்டு விழுமியங்கள் நிகழ்த்தும் அழுத்தங்களும் அதிலிருந்து துண்டுபட்டு விடுபடும் தருணங்களும் எனச் சிலநேர ஆசுவாசங்களைக் கையளிக்கிறது பொ.க.வின் கதை உலகம். இக்கதைகள் கொடுப்புக்குள் நகைப்பை உண்டாக்கினாலும் அவை தரும் அதிர்வுகள் எளிதில் வெளிவரமுடியாத உணர்வைத் தருகின்றன.
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய நூல் வெளிவருவது பெரும் பாராட்டிற்குரியது. ஈழத்துத் தமிழ் நாவல்களில் அக்கறை கொண்டோருக்குப் பயன்மிகுந்த ஒரு நூலைத் தேவகாந்தன் தந்திருக்கிறார்.
இது ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியப் பரப்பின் ஒரு முத்துக்குளிப்பு. எமது நாவல் இலக்கியக் கையிருப்பையும் அதன் தாரதம்மியத்தையும் ஒருசேரத் தொகுத்தளித்திருக்கும் பெரும் படையல். ஒரு சிருஷ்டி எழுத்தாளன் தேர்ந்த விமர்சகனாகவும் முகிழ்த்து, தனது வாசிப்பு என்ற உலைக்களத்தில் வார்த்தளித்த பனுவல் இதுவாகும்.
வலிமையான சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆன்ம பலத்தை வழங்குகின்றன வண்ணநிலவனின் கதைகள். நம்மைச் சோதிக்க முனைகின்ற ஒவ்வொரு தருணத்தையும் அதன் வன்மம்சார்ந்து இக்கதைகள் நமக்குக் காட்ட முனைவதால் இத்தகைய ஆன்ம பலம் நம்மில் உண்டாகிறது.
வண்ணநிலவனின் மனிதர்கள் எளிமையானவர்கள். ஆனால் நம் பார்வையின் எல்லைக்குள் அவர்கள் தென்படுவதில்லை. இவர்களின் துயரங்களைக் கணிப்பதற்கான படைப்பாற்றலை வண்ணநிலவன் கொண்டிருப்பது தமிழ் இலக்கியத்தின் பேறு.
இத்தகைய அரிய மனிதர்களின் வாழ்வை அதே தொனியில் மாற்றும்போது, படைப்பின் வலிமை குன்றிவிடலாகாது. எனினும் அதற்கான கவன ஈர்ப்பை
மனத்தில் கொள்ளாது இயல்பாகத் தன்னை மேலெழுப்பிக்கொள்வதில்தான் வண்ணநிலவனின் படைப்பாற்றல் ஒளிர்வதாக உணர்கிறேன்.
மேலே கூறப்பட்டவற்றிற்குச் சான்றுபகரும் கதைகளே இவை.
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கதை அறிவைச் சேகரித்துத் தொகுப்பதன் பின்னிருக்கும் மறைமுகமான அதிகாரம், அரசியல் ஆகியவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது.
தனித்துவமான கற்பனைகளைத் திருட்டிற்குப் பலி கொடுத்த ஒருத்தி, பிறரது சிந்தனைகளைத் திருடும் மேற்கத்திய மருத்துவனைத் தடுக்க, தன் வரலாற்றை இழந்த ஒருவனோடு, தனது பால்ய கனவுகளைத் தவறவிட்ட கன்னியாஸ்திரியையும் கூட்டுசேர்த்துக்கொண்டு, பூரணமாகக் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்திற்குள், முழுவதுமாய் எழுதி முடிக்கப்படாத நூலைத் தேடி அலைகிறாள்.
வழக்கமான நேர்க்கோட்டு விவரிப்பு முறையினின்றும் விலகி உள்ளடுக்குகள் கொண்ட மலரொன்று அலர்வதைப் போல நிதானமாக விரியும் இச் சிறு நாவல் நிறைவானதொரு வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது.
எல்லாவிதத் தேடல்களுக்கும் பிறகான பூரண அமைதியில் மனங்கடத்தும் தனித்த சந்தோஷத்தின் மிருது லயத்தையும், அதன் தீவிரத்தன்மையின் அழகியலையும் எல்லாவழிகளிலும் கைவிடப்பட்டிருக்கும் உணர்வுகளினாலான வலிகளையும் அடிப்படையாகக் கொண்டிருப்பவை இச்சொற்கள். மேலும் அம்மனதிற்கு மிகநெருக்கமான உலகமொன்றையும் அதன் பற்றற்றத் தன்மைகளின் எண்ணற்ற சாத்தியப்பாடுகளையும் ஒரு ஆழத்தில் இவை மறைத்தும் வைத்திருக்கின்றன. வாழ்வின் ஆகச் சிறந்தவற்றின் ஒளியை சிறு புதிர்களாகச் சொற்களில் கொண்டிருப்பவை இந்நூலின் கவிதைகள்.