Your cart is empty.
ஆவணக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக் குடும்பப் பெருமிதமும் கொலைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. இப்படிப்பட்ட இறப்புகளுக்குப் பின் தெய்வமாக்கப்பட்ட பதினான்கு பேரின் கதைகள்தான் இந்த நூல்; இதைப் புலனாய்வு அறிக்கை என்றும் கூறலாம். கதைகளை மட்டும் சொல்லாமல் அவற்றின் குற்றப் பின்னணி, தெய்வமாக்கப்பட்ட பின் உருவான வழிபாட்டு முறை என எல்லாவற்றையும் நூலாசிரியர் ஆழமாகப் பதிவுசெய்துள்ளார்.
அ.கா. பெருமாள்